ஐஸ்கிரீமை பரிமாறும் போது....
காபி தூள் பாட்டிலாக வாங்கிறவர்கள், பாட்டிலின் வாய்ப்பகுதியில் இருக்கும். அலுமினிய பேப்பர் அடைப்பை முழுமையாக நீக்கி விடவேண்டாம். அதில் ஒன்றிரண்டு துளைகள் போட்டு அதன் வழியாக காபிதூளைக் கொட்டினால், அதிக நாட்கள் பாதுக்காலாம். காபித்தூள் பாட்டிலில் ஸ்பூன் போட்டு வைப்பது நல்லதல்ல.
அப்பளம் வறுக்கும் எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் பொடி சேர்த்து விட்டு, அப்பளம் வறுத்தால் அப்பளம் அதிக மொறு மொறுப்பாகவும், நல்ல நிறமாகவும் இருக்கும்.
எலுமிச்சம் பழ சர்பத் தயாரிக்கும் போது கொஞ்சம் இஞ்சிச் சாறைக் கலந்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
தக்காளி சட்னி செய்யும் போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால் ருசி அதிகமாக இருக்கும்.
பெரிய துண்டுகளாக இருக்கும் ஐஸ்கிரீமை பரிமாறும் போது வெட்ட பயன்படுத்தும் ஸ்பூனை அடிக்கடி தண்ணீரில் முக்குங்கள். வேலை எளிதாக இருக்கும்.
0
Leave a Reply