பன்னீர் பட்டர் மசாலா போட்டுகிரேவியில் உப்பு அதிகமானால்
பன்னீர் பட்டர் மசாலா போட்டுகிரேவியில் உப்பு அதிகமானால் வேகவைத்தஉருளைக்கிழங்குடன் சிறிதளவு பிரெஷ் கிரீமை சேர்க்க, சுவை கூடும். உப்புத் தன்மையும் குறைந்துவிடும்.
கொதித்துக் கொண்டிருக்கும் கிரேவி அல்லது குழம்பில் தண்ணீர் சேர்க்க வேண்டி இருந்தால் சூடான நீரை சேர்க்கவும். சுவை மாறாமல் இருக்கும்.
சைடு டிஷ்க்கு வெள்ளை நிற கிரேவி தயாரிக்க முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு போன்றவற்றை மசாலாவுடன் சேர்த்து அரைத்து கிரேவி செய்யலாம்.
நெய் சேர்த்து கிரேவிசெய்வதற்கு பதிலாக வெண்ணை சேர்த்து செய்தால் மணமும் சுவையும் வேறலெவல்.
நார்த் இந்தியன் கிரேவி செய்யும்போது. புட் கலர் சேர்க்காமல் வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி செய்தால், கிரேவி சிவப்பு நிறமாக வரும். இறக்கி விடும் முன் அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்த்தால் சுவை ஜோராக இருக்கும்.
0
Leave a Reply