முகம் வெள்ளையாக மாற தேங்காய் எண்ணெயில் ஃபேஸ் பேக்
ஃபேஸ் பேக் தயாரிக்க தேவையான பொருட்கள்: ஃபேஸ் வாஷ் கிரீம், தேங்காய் எண்ணெய், சர்க்கரை
பயன்படுத்தும் முறை:இந்த மூன்று பொருட்களைக் கொண்டு, முகத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் பழுப்பு நிறத்தை எளிதில் நீக்கலாம். முதலில் ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்து அதில் சிறிது ஃபேஸ் வாஷ் போடவும். அதன் பிறகு ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையை முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். கடுமையாக தேய்த்தால், சர்க்கரை முகத்தில் சொறி, கீறவுகள் ஏற்படும். எனவே மெதுவாக மசாஜ் செய்யவும். இந்த பேக் நன்றாக காய்ந்த பிறகு, தண்ணீரில் கழுவவும். இப்படி வாரம் இருமுறை செய்து வந்தால் முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் மறையும்.
0
Leave a Reply