ஃப்ரூட் சாலட் ருசியாக இருக்க....
நமர்த்த பிஸ்கட்டை ஒன்றிரண்டாக பொடித்து, பழங்களுடன் கலந்து ஃப்ரூட் சாலட் செய்தால் ருசியாக இருக்கும்.
மிளகாயை அரைக்கும் போது சரியாகஅரைபடாது. அதனால், முதலில் மிளகாயுடன் சிறிது கல் உப்பு சேர்த்து அரைத்தால் நன்கு அரைபடும்.
ஒரு கப் கெட்டி அவல், 2 கிண்ணம் பச்சரிசி, சிறிது உளுந்தம் பருப்பு ஆகியவற்றை ஊற வைத்து அரைத்து ஊற்றினால் சுவையான தோசை தயார்.
மோரில் ஊற வைத்த வாழைப்பூவை சிறிது வதக்கி, துவையல் செய்தால் ருசியாக இருக்கும்.
வெங்காய பஜ்ஜிக்கானவெங்காயத்தை தோலை உரிக்காமல் வட்டமாக வெட்டிவிட்டு. பிறகு தோலை உரித்தால் வெங்காயம் தனித்தனியாக பிரியாமல் வட்டமாக இருக்கும்.
முருங்கைக்கீரையை சமைக்கும்போது சிறிதளவு சர்க்கரையை கலந்து சமைத்தால் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் உதிரியாக இருக்கும்.
0
Leave a Reply