அடர்த்தியான தலைமுடி வளர ....
தலைமுடி அடர்த்தியாக வளர எண்ணெய் விளக்கெண்ணெயை2 டேபிள் ஸ்பூன், தேங்காய் எண்ணெயை1 டேபிள் ஸ்பூன் இரண்டையும் லேசாக சுடவைத்து, மிதமான சூட்டில் எண்ணெயை எடுத்து முடிகளின் வேர்ப்பகுதியில் நன்றாக படும்படி தடவவும்.பின்பு ஒரு காட்டன் துணியை எடுத்துக்கொண்டு அதனை வெந்நீரில் நனைத்துக்கொள்ளவும்.அந்த துணியை தலைமீது சுற்றவும் அவற்றில் இருக்கும் சூடு தலையில் இறங்கும், அந்த துணியில் இருக்கும் சூடு ஆறியதும் மீண்டும் சுடுதண்ணீரில் அந்த துணியை நனைத்து தலையில் சுற்றவும்.அதன்பிறகு ஷாம்பு போட்டு தலைகுளித்து வர தலைமுடி உதிர்வு பிரச்சனை சரியாகும் மற்றும் தலைமுடி வளர ஆரம்பிக்கும்.
வறண்டதலைமுடி வறண்டு இருந்தால் ஒரு கிண்ணத்தில் மருதாணி பொடி, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து கூந்தலில் நன்றாக தடவி 1/2 மணி நேரம் கழித்து தலை அலசினால் வறண்ட தலைமுடி பட்டுப்போன்று மென்மையாக மாறும்..
0
Leave a Reply