அடை மொறுமொறுவென்று இருக்க....
தக்காளி குருமா செய்யும் போது சிறிது வெங்காயத்தை பச்சையாக அரைத்து ஊற்றினால், குருமா வாசனையுடன் சுவையாகவும் இருக்கும்.
அடைக்கு அரைக்கும் போது மர வள்ளிக் கிழங்கை உரித்து சில துண்டுகள் சேர்த்து அரைக்கலாம். உருளைக் கிழங்கையும் துண்டுகளாக்கிப் போட்டு அரைக்கலாம். அடை மொறுமொறுவென்று இருக்கும் .
மாவடு ஊறுகாயில் சிறிதளவு விளக்கெண்ணெய் விட்டால் பூச்சிகள் வராமல் நீண்ட நாள் கெட்டுப் போகாமல் இருக்கும்.
ஊறுகாயைப் பாட்டிலில் போடுவதற்கு முன்பு, நல்லெண்ணெயை இரண்டு ஸ்பூன்விட்டு, பாட்டில் முழுக்க அது
பரவும் படி செய்து விட்டு, ஊறுகாய் போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.
ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.
பொரியல் செய்யும்போது தேங்காய்க்கு பதிலாக, சிறிது புழுங்கல் அரிசியை வறுத்து, பொடி செய்து பொரியலில் போடலாம் .
0
Leave a Reply