உணவுப் பொருட்களில் பூச்சி வராமல் இருக்க …..
மைதா, ரவா டப்பாக்களில் கல் உப்பை ஒரு துணியில் முடிந்து போடலாம். உலர்ந்த வேப்பிலை போடலாம். கசக்காது. புழு பூச்சி வராது. சுக்குத்தூளும் தூவலாம்.
இஞ்சி, பூண்டு, விழுது தயாரிக்க இரண்டையும் 2க்கு மூன்று என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும். இஞ்சியை குறைவாக பயன்படுத்தினால் பண்டம் ருசியாக இருக்கும்.
வடை, போண்டா போன்றவற்றை எண்ணெயில் பொரிக்கும் போது, அதிக எண்ணெய் குடிக்காமல் இருக்க, எண்ணெய் காயும்போது சிறிது உப்பு போட்டால் எண்ணெய் குடிக்காமல் இருக்கும்.
தக்காளி சூப் செய்யும் போது நன்றாக வேகவைத்த பீட்ரூட் துண்டு ஒன்றை அதில் போட்டால் சூப் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.சூப் பருகவும் சுவையாக இருக்கும்.
ஜவ்வரிசி, ரவை இரண்டையும் சம அளவு எடுத்து வறுத்து, அதில் பால் சேர்த்து வேகவிட்டு,வெல்லபாகு சேர்த்து, நெய்விட்டுக் கிளறினால், சுவையான சர்க்கரைப் பொங்கல் தயார்.
0
Leave a Reply