உதடுகளை பளபளப்பாக்க....
ஆரஞ்சுப் பழச்சாற்றை உதட்டில் தடவும் போது உதடு நிறம் மாறும்
மாதுளம் பழத்தின் சாற்றை உதடுகளின் மீது பூசி வந்தால் உதடுகள் அழகாகும்
கற்றாழையை உதடுகளில் தடவும் போது கருமை மறைந்து சிவப்பழகு பெறும்
மஞ்சள்தூள் உதடுகளில் தடவும்போது கிருமிகள் அழிந்துவிடுகிறது.
புதினா மற்றும் நெல்லிக்காய் சாறு உதடுகளில் தடவும் போது கருமை மறைந்து சிவப்பழகு பெறும்.
ஒரே அளவில் தேன் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து கொள்ளுங்கள்.அந்த கலவையை உங்கள் உதடுகள் மீது பூசி விட்டு, ஒரு மணி நேரம் கழித்து கழுவுங்கள்.இதனால் உலர்ந்த உதடுகளில் ஈரப்பதம் அதிகரிப்பதோடு,உதட்டின் நிறமும் மாற்றமடையும்.
பீட்ரூட் எந்த அளவுக்கு நம் உடலுக்கு நல்லதோ,அதே அளவிற்கு உங்கள் உதடுகளுக்கும் நன்மையளிக்கும்.சிறிய பீட்ரூட் துண்டை எடுத்து உங்கள் உதட்டில் தடவி ஒரு மணி நேரம் காய வைத்து பின்னர் கழுவுங்கள்.இதனை தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் உதட்டின் நிறம் "பிங்க்" நிறத்தில் மாறும்.
சிலர் வெள்ளரி துண்டுகளை குளிர்ச்சிக்காக கண்களில் வைப்பதை பார்த்திருப்போம்.ஆனால் வெள்ளரிச் சாற்றை உதடுகளில் தடவி வர,கருஞ்சிவப்பு நிறத்தில் உள்ள உதடுகள் பழைய நிறத்தை பெறும்.
0
Leave a Reply