உதடு வறட்சியைத் தடுக்க….
உதடுகள் மென்மையானவை என்பதால் அதனால் ஈரத்தன்மையுடன் வைத்துக்கொள்வது அவசியம். உணவில் நீர்ச்சத்து அதிகம் கொண்ட காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்துக்கொள்ளவும்.நாள் ஒன்றுக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
தேங்காய் எண்ணெயை தினமும் இருமுறை உதடுகளில் தடவி, சில நொடிகள் மசாஜ் செய்யவும். இது, வறண்ட உதடுகளுக்கு ஈரப்பதத்தை சேர்க்கிறது.கற்றாழை ஜெல்லை உதடுகளில் தடவி, இரவு முழுவதும் அப்படியே விட்டு விட்டு, காலையில் கழுவலாம்.
இயற்கை மாய்ஸ்ச்சுரைசரான தேன், வறண்ட மற்றும் வெடித்த உதடுகளுக்கு சிகிச்சையளிக்க ஏற்றது. உதடுகளில் ஏற்படும் வெடிப்பு, புண்களை சீக்கிரம் குணப்படுத்தும்.வெள்ளரிக்காய் துண்டை, உதடுகளில் மெதுவாக ஓரிரு நிமிடங்கள் தேய்க்கவும். பத்து நிமிடங்கள் சாறு உதட்டிலிருக்கும் படி விட்டு பின்னர், கழுவவும்.தினமும் இரண்டு அல்லது மூன்று முறை இதை செய்யலாம்.
0
Leave a Reply