உப்பு ஜாடியில் தண்ணீர் வடிவதை தடுக்க....
வற்றல் குழம்பு கொதித்த பின், நெல்லிக்காய் அளவு வெல்லம் சேர்த்தால் சுவையாக இருக்கும்.
உப்பு ஜாடியில் தண்ணீர் வடிவதை தடுக்க சிறிது புளித்துண்டை ஜாடியில் போட்டு வைத்தால் நீரத்தன்மையை புளிஎடுத்துவிடும்.
காய்கறிகள் வறுவல் செய்யும்போது எண்ணெய் சூடாகும் சமயத்தில் ,சிறிது சர்க்கரை சேர்த்து வறுவல் செய்தால் சுவையாக இருக்கும்.
சாம்பார், குழம்பு ரசம் இவற்றுக்கான மசாலா கலவையில் ஒரு சின்ன வெங்காயத்தையும் சேர்த்தால் மணமும், சுவையும் கூடும்.
கூட்டு, குழம்பு ஆகியவற்றுக்கு அரிசி மாவை கரைத்து விடுவதற்கு பதில் பொட்டுக்கடலை மாவை சேர்த்தால் சுவையாகவும் இருக்கும்.சீக்கிரம் ஊசியும் போகாது.
0
Leave a Reply