எலுமிச்சை ஊறுகாயுடன் வதக்கிய இஞ்சித்துண்டுகள்....
ரசம்வாசனையாக இருக்க கொத்தமல்லி தழை கிடைக்காத நேரத்தில் தனியாவை (கொத்தமல்லி விதைகளை நெய்யில் வறுத்து பொடிசெய்து வைத்துக்கொண்டு ரசத்தில் சேர்க்கலாம்.
கொண்டைக்கடலை,பட்டாணி, மொச்சை போன்றவற்றில் சமையலுக்கு தேவையானதை முதல் நாள் இரவு ஊற போட மறந்துவிட்டால் அவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து பிறகு குக்கரில் வேக வைத்தால் நன்கு வெந்து விடும்.
எலுமிச்சை ஊறுகாயுடன் வதக்கிய இஞ்சித்துண்டுகள் சிறிதளவு சேர்த்துக் கிளறினால், மணம் தூக்கலாக இருக்கும்.
ரவா லட்டு செய்யும்போது, சிறிதளவு மிக்ஸியில் ரவை போல் பொடித்து, நெய்யில் வறுத்து சேர்த்து கொஞ்சம் பால் பவுடரையும் கலந்து லட்டு பிடித்தால் சுவை அதிகரிக்கும்.
வெண்னொயை நெய்யாக உருக்கும் போது, ஒரு துளி உப்பு சேர்க்கவும். நெய் சாஃப்ட்டாக இருக்கும். துகள், துகளாக வரும் நல்ல வாசனைக்கு கொஞ்சம் கறிவேப்பிலை, வெந்தயம் சேர்க்கலாம்.
வடகத்தில் பூச்சி வராமல் நீண்ட நாள் இருக்க,அதனுடன் மிளகாய் வற்றலையும் கொஞ்சம் போட்டு வைத்தால் போதும்; மிளகாயின் காரத்தினால் பூச்சி அண்டாது.
0
Leave a Reply