காய்கறிகள் எளிதில் வேக....
தோசை மாவு நீர்த்து இருந்தால் பாலில் இரண்டு ஸ்பூன் ரவை மற்றும் அரிசி மாவு சேர்த்து அதனுடன் கலந்து விட்டால் மேலும் நீர்த்துப் போகாது, புளிப்பும் தெரியாது.
காய்கறிகளை வேகவைக்கும் போது அதனுடன் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்தால் காய்கறிகள் எளிதில் வெந்துவிடும்.
மீதமான தேங்காய் சட்னியைகெட்டியான புளிப்பு மோரிலசேர்ந்து ஒரு கொதி விட்டால் சுவையான மோர் குழம்பு தயார். கொள்ளு, காராமணி வேக வைத்த நீரை கீழே கொட்டாமல் சூப் செய்ய பயன்படுத்தலாம்.சத்தாக இருக்கும்.
தோசைக் கல்லில் தோசை சுடும் போது தோசை மாவில் சிறிது சர்க்கரையைப் போட்டு தோசை சுட்டால் மொறு மொறுப்பாக வரும்.
வாழைப்பழத்தின் காம்பு பகுதியை பிளாஸ்டிக்கால் சுற்றிவைதால், நான்கு நாட்கள்வரை கருக்காமல் அப்படியே இருக்கும்.
0
Leave a Reply