குருமா கெட்டியாகவும் வரும். சுவையாகவும் இருக்க....
குருமாவில் வேக வைத்த உருளைக்கிழங்கை நறுக்கி போடாமல், கையால் நசுக்கி உதிர்த்துப் போட்டால், குருமா கெட்டியாகவும் வரும். சுவையாகவும் இருக்கும்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கை கழுவி தோல் சீவாமல் மெலிதாக சிப்ஸ் கட்டையில் சீவவும். எண்ணெயில் சிப்ஸாக பொரித்து எடுத்து மிளகுப் பொடி தூவவும். இனிப்பும் காரமும் கலந்த புதுவிதமான சிப்ஸ் தயார்.
உருளைக்கிழங்கைச் சீவி ஒரு வெள்ளைத் துணியில் கட்டி கொதிக்கும் நீரில் ஐந்து நிமிடம் அமிழ்த்தி வைத்து எடுத்து பிறகு குளிர்ந்த உப்பு தண்ணீரில் போட்டு கொதிக்கும் எண்ணெயில் போட்டு வறுத்து எடுத்தால் வெள்ளை வெளேரென்று சிப்ஸ் கரகரப்பாக இருக்கும்
பீட்ரூட்டில் அல்வா, பூரி, பாயாசம் போன்றவை செய்யும் முன் பீட்ரூட்டை வினிகரில் முக்கி எடுத்து நீரை வடிகட்டி நறுக்கினால் சிவப்பு நிறம் மாறாமல் இருக்கும்.
உளுத்தம் பருப்பை கால் மணி நேரம் ஊற வைத்து, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து ஒன்றும் இரண்டுமாய் நைசாக இல்லாமல் அரைக்கவும். அதில் பச்சை கடுகு சேர்த்து சிறு சிறு உருண்டை யாக்கி வெயிலில் காய வைத்து டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ளவும் இதை எண்ணெயில் பொறித்து கூட்டு, பொரித்த குழம்பு ஆகியவற்றில் கலந்தால் செம ருசியாக இருக்கும்.
கீரைகளை செய்தித்தாளில் மடித்து வைத்தால் அவற்றின் பசுமை நிறம் மாறாது.
0
Leave a Reply