கெட்டியான தயிர் கிடைக்க.....
உறை மற்றும் பாலில் தண்ணீர் சேர்த்திருக்கக் கூடாது. அப்படியானால்தான் கெட்டியான தயிர் கிடைக்கும். பாலில் தண்ணீர் சேர்க்கப்பட்டிருந்தால் லேசான தீயில் பாலை வைத்து வற்றச் செய்ய வேண்டும்.
மீன் வறுபதற்கு மசால் தயாரிக்கும் போது அதில் சிறிதளவு புதினா, மல்லி இலை, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு, சிறிய வெங்காயம் போன்றவைகளை அரைத்து சேருங்கள். அவைகளை மீனில் பூசி, ஒருமணி நேரம் வைத்துவிட்டு பிள்பு வறுத்தால் மீனுக்கு அதிகசுவை கிடைக்கும்.
சூடான எண்னெயில் ஒரு தேக்கரண்டிமைதா சேர்த்து கிளறிவிட்டு பின்பு மீனை வறுங்கள். அவ்வாறு செய்தால் மீன் வாணலியில் ஒட்டிப்பிடிக்காது.
மோர்க்குழம்பு செய்யும் போது ஒரு மஞ்சள் வாழைப்பழத்தை நன்கு பிசைந்து சேர்த்துக் கொண்டால் ருசிதான்.
குருமாவின் அளவை அதிகரிக்க வேகவைத்த உருளைக்கிழங்கை நன்றாக மசிய வைத்து சேர்க்கலாம். சூடான பசும்பாலையும் சேர்க்கலாம்.
0
Leave a Reply