சப்பாத்தி நன்கு உப்பி வர....
சப்பாத்தி சாஃப்ட்டாக வருவதற்கு மாவு பிசையும் போது சிறிது பால் சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக வரும்.
சப்பாத்திக்கு மாவுப் பிசையும்போது அதனுடன் இரண்டு கைப்பிடி அளவு கடலை மாவையும் சேர்த்துப் பிசைந்தால் சப்பாத்தி நிறமாகவும், மணமாகவும் இருக்கும்.
சப்பாத்தி மாவு மீதமிருந்தால் மாவின் மீது எண்ணெய் தடவி வைத்தால் கருப்பாக காய்ந்துபோகாமல் இருக்கும்.
சப்பாத்தி சுடும்போது கல்சூடானதும் ஒரு முறை எண்ணெய் விடாமல் இருபுறமும் போட்டு எடுத்து பிறகு எண்ணெய் ஊற்றி சப்பாத்தி சுட்டால் மிருதுவாகவும், ருசியாகவும்இருக்கும்.
சப்பாத்தியைநன்கு திரட்டி அதன் மேல் எண்ணெய் ஊற்றி நான்காக மடித்து மீண்டும் ஒரு முறை திரட்டினால், சப்பாத்தி நன்கு உப்பிவரும். மிருதுவாக இருக்கும் .
0
Leave a Reply