சமைக்கும்போது, கத்திரிக்காயின் நிறம் மாறாமல் இருக்க.....
சமைக்கும்போது, கத்திரிக்காயின் நிறம் மாறாமல் இருந்தால் எத்தனை அழகாக இருக்கும் அந்த சமையல்! அதற்கு, கத்திரிக்காயை வேக வைக்கும்போது. அதனுடன் ஒரு தேக்கரண்டி தயிரை சேர்த்துக் கொண்டால். கத்திரிக்காயின் நிறம் மாறாமல் இருக்கும்.
நெல்லிக்காயை மிக்ஸியில் அரைத்து வடிகட்டி, ஒன்றரை லிட்டர் தண்ணீரில் கலந்து வைத்துக்கொண்டு. சம்மரில் தாகம் எடுக்கும்போது குடித்தால் உடல் அசதி நீங்கும்.
தயிர் உறை ஊற்ற போகிறீர்கள் என்றால் பாலை5 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து கொண்டால் தான் தயிர் கடையில் கிடைப்பது போல ரொம்பவும் திக்காக கிடைக்கும் இல்லை என்றால் நீங்கள் என்னதான் செய்தாலும் தயிர் கெட்டியாக உங்களுக்கு கிடைக்காது. எனவேஇந்த தவறை செய்யாதீர்கள், பாலை நன்கு கொதிக்க வைத்ததும், ஒரு கப் பாலுக்கு,ஒரு ஸ்பூன் அளவு தயிர் சேர்த்து எவர்சில்வர் பாத்திரம் அல்லது மண் அல்லது பீங்கான் பாத்திரத்தில் போட்டு குறைந்தது 8 மணி நேரம் அப்படியே வெளியில் வைத்து விடுங்கள் பிறகு திக்கான தயிர் ரெடி.
வெந்தய குழம்பு செய்யும்போது நல்லெண்ணெய்யில் தாளித்து அதிலேயே மிளகாய் பொடி, காய்கறிகளை வதக்கி. பிறகு புளி, உப்பு சேர்த்து குழம்பு செய்தால் வாசனை பிரமாதமாக இருக்கும்.
0
Leave a Reply