சமையலில். தாளிக்கும்போது கடுகு போட்ட பின்....
கிச்சனில் வெகு நேரம் நின்று சமைப்பது மிகவும் கடினம் என்றால், அதைவிடக் கடினம் கிச்சனில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிப்பது. அப்படி கிச்சனில் பொதுவாக நடக்கும் , குக்கரில் பருப்பு பொங்கி விடுவது, சிங்க்ல் அடிக்கடி கரை படிந்து விடுதல் மற்றும் பாத்திரங்களில் துருப்பிடித்து விடுவது போன்ற பிரச்சினைகளை எப்படி சமாளிக்கலாம் .
குக்கரில் பருப்பு காய்கறிகள் போன்றவற்றை வேக வைக்கும்போது அது பொங்கி வழிந்து அடுப்பை அணைத்துவிடும். இதனால், குக்கரைக் கழுவுவதற்கும், கேஸ் ஸ்டவ்வை துடைப்பதற்கும் கஷ்டமாக இருப்பதால், இல்லத்தரசிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இனி பருப்பு மற்றும் காய்கறிகளை குக்கரில் வேகவைக்கும் போது உள்ளே ஒரு சில்வர் ஸ்பூனைப் போட்டு வேக வையுங்கள். இப்படி செய்தால் குக்கரை விட்டு தண்ணீர் வெளியே பொங்கி வழியாமல் இருக்கும்.
அதேபோல நீங்கள் பயன்படுத்தாத பாத்திரங்களில் துருப்பிடித்து விட்டதா? எவ்வளவு தேய்த்துக் கழுவினாலும் போகவில்லையா? இதை எளிதாக சுத்தம் செய்ய, கொஞ்சமாக டூத் பேஸ்ட்டை துருப்பிடித்துள்ள இடத்தில் வைத்து உப்பு காகிதம் போட்டு தேய்த்தால், துருக்கரை இருந்த இடம் தெரியாமல் போய்விடும்
இலைகள் உள்ள காய்கறியை வாங்கும் பொழுது அது நமக்கு கூட்டு மற்றும் சூப் தயாரிக்க உதவும். குறிப்பாக முள்ளங்கி, காலிபிளவர் போன்ற காய்கறிகளில் இலைகளோடு சேர்த்து வாங்கிக் கொள்வது நமக்கு மிகவும் நல்லது. அதன் இலைகளை நறுக்கி சூப் செய்து குடிக்கலாம்.
சமையலில். தாளிக்கும்போது கடுகு போட்டபின் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், சேர்த்துக் கொள்ளுங்கள்! இதனால் கடுகு வெடித்தாலும் மேலே எழுந்து சிதறாது'
0
Leave a Reply