செப்., 20ல் ரிலீஸ் ஆகும் படங்கள்
கோழிப்பண்ணை செல்லதுரை' ரிலீஸ்
சீனு ராமசாமி இயக்கத்தில் புதுமுகங்கள் நடித்துள்ள படம் 'கோழிப் பண்ணை செல்லதுரை'. முக்கிய வேடத்தில் யோகிபாபு நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக் கின்றன. சில தினங்களுக்கு முன் இதன் டீசர் வெளியானது. எதார்த்த படைப்பாக உருவாகி உள்ள இந்த படம் செப்., 20ல் ரிலீஸாகிறது என சீனு ராமசாமி அறிவித்துள்ளார்.
'வேட்டையன்' இசை வெளியீடு
ஞானவேல் இயக்கத்தில் ரஜினி, அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரி யர் நடிப்பில் தயாராகி உள்ள படம் 'வேட்டையன்'. அக்., 10ல் ரிலீஸாக உள்ள நிலையில் இப்படத் தில் இருந்து 'மனசிலாயோ' என்ற முதல்பாடலை விரைவில் வெளியி டப் போவதாக இசையமைப்பாளர் அனிருத் அறிவித்துள்ளார். அதோடு செப்., 20ல் படத்தின் இசை வெளியீட்டு விழாவை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
மாளவிகாவின் ஹிந்தி படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
. மலையாள நடிகை யான மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவை தாண்டி பிறமொழிகளிலும் நடிக்கிறார். ஏற்கனவே ஹிந்தியில் ஒரு படத்தில் நடித்தி ருப்பவர் இப்போது 'யுத்ரா' என்ற படத்தில் நடித்துள்ளார். சித்தாந்த் சதுர்வேதி நாயகனாக நடிக்க, ரவி உத்யவார் இயக்கியுள்ளார். அதிரடி ஆக்க்ஷன் கதையில் உருவாகி உள்ள இந்த படம் செப்., 20ல் ரிலீஸ் என புதிய போஸ்டருடன் அறிவித்துள்ளனர்.
சட்டம் என் கையில்' ரிலீஸ்
நகைச்சுவை நடிகராக இருந்த சதீஷ் சமீப காலமாக நாய் சேகர், கான்ஞ்சுரிங் கண்ணப் பன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து வரவேற்பை பெற்று வருகிறார். அடுத்து சச்சி இயக்கத்தில் 'சட்டம் என் கையில்' எனும் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். வித்யா பிரதீப் நாயகியாக நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து மற்ற பணிகள் நடந்து வரும் சூழலில் செப்., 20ல் படம் ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.
'நந்தன் ரிலீஸ்
உடன்பிறப்பே படத்திற்கு பின் மீண் டும் சசிகுமாரை வைத்து நத்தன் என்ற படத்தை ஈ.ரா. சரவணன் இயக்கி உள்ளார். சமுத்திரக்கனி, பாலாஜி சக்திவேல், ஸ்ருதி பெரியசாமி நடித்துள்ளனர். படப்பி டிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கும் நிலையில் செப்., 20ல் ரிலீஸ் என அறிவித்துள்ளனர், சென்ட்டிமென்ட் கலந்த ஆக்க்ஷன் படமாக உருவாகி உள்ளது.
0
Leave a Reply