நெய் நல்ல மணமாக இருக்க....
வெண்ணெயை காய்ச்சி இறக்கும்போது கடைசியில் ஒரு ஸ்பூன் வெந்தயம் போட்டுவிடுங்கள். நெய் நல்ல மணமாகவும் இருக்கும் கசக்கவும் செய்யாது.
வெங்காயத்தைத் தோலோடு குளிர்ந்த நீரில் போட்டு பின்னர் நறுக்கினால் கண்களில் கண்ணீர் வராது.
பச்சை மிளகாய் ஒரு மாத காலத்திற்கு மேலாக கெடாமல் இருக்க ஒரு காகித கவரில் சிறிய துளையிட்டு, பச்சை மிளகாய்களை அதில் போட்டு ஃபிரிட்ஜில் வைக்கவும்.
தோசைக்கு ஊற வைக்கும்போது1 கிலோவிற்கு50 கிராம் வேர்க்கடலை,50 கிராம் பட்டாணி சேர்த்து ஊற வைத்து அரைத்து மாவுடன் கலந்து தோசை வார்த்தால் நிறமான. சுவை அதிகமான சத்து நிறைந்த தோசை ரெடி .
தயிர் பச்சடி, சாலட் என்று எது செய்தாலும். தேங்காய் எண்ணெயில் கடுகு கறிவேப்பிலை தாளித்துக் கொட்டினால் வாசனை தூக்கலாக இருக்கும்.
0
Leave a Reply