பாயசம் நீர்த்துப்போய்விட்டால்...
தேங்காய் சட்னிஅரைக்கும் போது பச்சை மிளகாய்யைலேசாக வதக்கி அரைத்தால் சட்னி வாசனையாக இருக்கும்தேங்காய் தோல் எடுத்து அரைச்சா வெள்ளையாக இருக்கும். பொரிகடலை கொஞ்சமா சேர்க்கனும்.இரண்டு கருவேப்பிலை ஒரு பூண்டு பல் ,துளியூண்டு புளி ,உப்பு சேர்ந்து அரைத்தால் நன்றாக இருக்கும்.
பாயசம் நீர்த்துப்போய்விட்டால் குலோப் ஜாமூன் மிக்ஸை பாலில் கரைத்து ஊற்றி நன்கு கலக்கவும். திக்காகவும் இருக்கும். டேஸ்ட்டாகவும் இருக்கும்.
வறுத்த வேர்க்கடலைப் பொடியை, வெண் டைக்காய் ஃப்ரை செய்யும்போது, சிறிதளவு தூவி இறக்கினால் சுவை கூடும்.
இடியாப்ப மாவு பிசையும்போது அரை டம்ளர் கொதிக்கும் பாலையும் விட்டுக் கிளறி, இடியாப்பம் செய்தால் சுவை கூடும். நல்ல வெள்ளை நிறத்திலும் இருக்கும்.
கலந்த சாதம் செய்ய வடிக்கும் சாதத்தில் சில துளிகள் நல்லெண்ணெய் விட்டால் சாதம் குழையாமல் உதிரி உதிரியாக இருக்கும்.
0
Leave a Reply