பூண்டு கெட்டுப்போகாமல் இருக்க.....
பூண்டு கெட்டுப்போகாமல் இருக்க கொஞ்சம் கேழ்வரகை சேர்த்து வைத்தால் புழுக்காமல் நீண்ட நாட்கள் வரை இருக்கும்.
பூரி சுடும் போது நாம் ஒவ்வொரு பூரியாக திரட்டிய பிறகு தான் எண்ணெயில் போட வேண்டும். இதனால் அதிக நேரம் பிடிக்கும். அதற்கு சப்பாத்தி திரட்டும் கல்லில் சப்பாத்தி அகலத்திற்கு பெரிதாக மாவை தேய்த்து கொள்ளுங்கள்.அதன் பிறகு ஒரு சிறிய கிண்ணமோ முடியோ வைத்து சின்ன சின்ன பூரிகளாக எடுத்து விடுங்கள். இது சிறிதாக இருப்ப தால் பொரிக்கும் போதும் இரண்டு மூன்று பூரிகளாகவே போட்டுபொரிக்கலாம். இதனால் எண்ணெய்யும் மிச்சமாகும் சீக்கிரத்தில் சமையலும் முடியும்.
கீரையை சுத்தம் செய்து பொரியலுக்கு நறுக்குவதும் கொஞ்சம் சிரமமான வேலை தான். அதற்கு கீரையை நன்றாக சுத்தம் செய்த பிறகு கடைகளில் பழங்கள் போட்டு தரும் வலை பையில் போட்டு விடுங்கள். அதன் பிறகு பையை வெளிப்புறமாக மடித்து கொஞ்சம் கொஞ்சமாக கீரையை நறுக்குங்கள். ஒரே நேரத்தில் மொத்த கீரையும் நறுக்கி விடலாம்,
0
Leave a Reply