பெண்களுக்கு உதட்டின் மேல் முடி வளராமல் இருக்க…
சில பெண்களுக்கு ஆண்களை போல் உதட்டின் மேல் மீசை முடி முளைத்திருக்கும். அது முகத்தின் அழகை கெடுக்கும்.அதனால் சிலர் பார்லருக்குச் சென்று திரட்டிங் செய்து கொள்வதுண்டு, திரெட்டிங் செய்வதினால் முடி வளர்வது குறையாது என்பதை முதலில் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவற்றை குறைக்க இயற்கையாகவே மருத்துவம் இருக்கிறது. குப்பை மேனி இலை, வேப்பங்கொழுந்து. விரலி மஞ்சள் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக் கொள்ளவும். இவை அனைத்தையும் நன்கு அரைத்து தூங்கச் செல்லும் முன் மேல்உதட்டில் பூசவும். காலை எழுத்ததும் கழுவிவிட வேண்டும் .தொடர்ந்து இரு வாரங்கள் இவ்வாறு பூசி வந்தால் முடி அல்லது மீசை போல் அருவருப்பாக இருக்கும் முடி நிரந்தரமாக உதிர்ந்து விடும். மறுபடியும் அந்த இடத்தில் முடி வளரவே வளராது.
0
Leave a Reply