மகாலட்சுமியின் அருளை பெற…
பூஜை அறையில் விளக்குபிரம்ம முகூர்த்த வேளையில், கை, கால்களை கழுவி விட்டு, பூஜை அறைக்குள் வலது காலை எடுத்து வைத்து செல்ல வேண்டும். பூஜை அறையில் விளக்கேற்றி, ஊதுபத்தி மட்டும் ஏற்றி வைத்து விட்டு வந்து விட்டால் போதும். அந்த வீட்டிற்கு மகாலட்சுமி வந்து விடுவாள். எந்த ஒரு வீட்டில் பிரம்ம முகூர்த்த வேளையில் விளக்கு ஏற்றப்படுகிறதோ அந்த வீட்டிற்கு மகாலட்சுமி வருவாள். அதோடு மகாலட்சுமிக்கு விருப்பமான ஊதுபத்தி, பச்சை கற்பூரம் மணம், வெற்றிலை பாக்கு அங்கு இருந்தால் மன மகிழ்ச்சியுடன் வந்து, தன்னுடைய பூரண அருளை வழங்கி, இங்கேயே இருந்து விட வேண்டும் என மகாலட்சுமி விரும்புவாள் .
சமையல் அறையை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தினமும் இரவில் தூங்க செல்வதற்கு முன்பு, வீட்டின் சமையல் அறையை சுத்தம் செய்து, அடுப்பை சுத்தமாக வைக்க வேண்டும். அடுப்பு வைத்திருக்கும் மேடையில் சிறிய கோலமிட்டு விட்டு செல்லுங்கள். காலையில் எழுந்து வந்ததும், அடுப்பை தொட்டு வணங்கி விட்டு சமையல் வேலைகளை துவங்குங்கள். இப்படி தினமும் செய்பவர்களை மகாலட்சுமிக்கு மிகவும் பிடிக்கும். எந்த விட்டில் சமையலறை சுத்தமாக உள்ளதோ அந்த வீட்டில் மகாலட்சுமியும், அன்னபூரணியும் மகிழ்ச்சியாக வந்து தங்குவார்கள். அந்த வீட்டில் குறைவில்லாத அரிசி, தானியங்கள் பெருகிக் கொண்டே இருக்க அருள வேண்டும் என அன்னபூரணியிடம் மகாலட்சுமியே சொல்லுவாளாம்.
0
Leave a Reply