மன அழுத்தம் குறைய...
வேலைப்பளு, அலைச்சல், பொருளாதார வசதியின்மைஉட்பட பல்வேறு காரணங்களால் இன்று மன அழுத்தம் பலருக்கும் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. பெரியவர்கள் மட்டுமின்றி சிறுவயதி னரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவது சர்வ சாதாரணமாகிவிட்டது. புத்தகம் படிப்பது, பாடல் கேட்பது, தோட்டதுக்கு தண்ணீர் விடுவது, வீட்டு விலங்குகள் , பறவை களுடன் நேரம் செலவிடுவது போன்றவை மன அழுத்தத்தை குறைக்கும். நேர்மையான சிந்தனை உள்ள நண்பர்களுடன் நிறைய நேரம் செலவிடுதல், ஒரு நேரத்தில் ஒரு பணியை மட்டும் செய்தல், முக்கிய மான பணிகளை முடித்தல், பகிர்ந்து கொள்ள ஒரு நண்பனைக் கொண்டிருத்தல் போன்றவையும் பயனளிக்கும். யோகா, தியானம் போன்ற பயிற்சிகளை மேற்கொள் ளுவதால், மன அழுத்தம் வராமல் தவிர்க்க இயலும்.
0
Leave a Reply