மிக்ஸியில் பிளேட் கூர்மையாக....
ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.
புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.
பொரியல் செய்யும்போது தேங்காய்க்கு பதிலாக சிறிது புழுங்கல் அரிசியை வறுத்து, பொடி செய்து பொரியலில் போடலாம்
ஊறுகாயைப் பாட்டிலில் போடுவதற்கு முன்பு நல்லெண்ணெயை இரண்டு ஸ்பூன்விட்டு, பாட்டில் முழுக்க அது பரவும்படி செய்து விட்டு ஊறுகாய் போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.
வெண்டைக்காய் பொரியல் செய்யும் போது ,கடைசியில் கடலைமாவு கொஞ்சம் தூவி, ஸ்டவ்வை சிம்மில் வைத்து, கிளறி இறக்கினால், சுவை கூடும்.
மிக்ஸியில் பிளேட் கூர்மை இல்லா விட்டால், அதில் சிறிதளவு கல் உப்பைப் போட்டு ,ஓடவிட்டால் பிளேட் சரியாகிவிடும்
0
Leave a Reply