ரசம் சுவையாக இருக்க ....
கத்திரிக்காயைச் சமைக்கும்போது ஒரு ஸ்பூன் கெட்டித் தயிரை ஊற்றினால், கத்திரிக்காயின் நிறம் மாறாமல் இருப்பதோடு சுவையும் கூடும்.
முருங்கைக்கீரையைப் பொரியல் செய்யும்போது, ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்தால், கீரையின் இலைகள் ஒன்றோடொன்று ஒட்டாமல் உதிர் உதிராக இருக்கும்; கீரையும் ருசிக்கும்,
மல்லி பூ பத்து நாள் ஆனாலும் மலராமல் இருக்க ஒரு பிளாஸ்டிக் அல்லது சில்வர் மூடி போட்ட பாக்ஸ் எடுத்து அதில் கொஞ்சம் பேப்பர் வைத்து எந்த பூவாக இருந்தாலும் சரி மல்லி ,முல்லை, பிச்சி பூ இப்படி வைத்து பிரிட்ஜில் வைத்து பாருங்க பூ அப்படியே பத்து நாள் ஆனாலும் மலரவே மலராது
சாம்பார் கொதித்த பின் வெந்தயத்தை வறுத்து பொடி பண்ணி தூவி | இறக்கினால் சுவையான கல்யாண அய்யர் வீட்டு சாம்பார் போல் தெருவே மணக்கும்
ரசம் சுவையாக இருக்க கொஞ்சம் துவரம் பருப்பு வேக வைத்த தண்ணி, சீரகம், மிளகு, வர மல்லி, கருவேப்பிலை போட்டு மிக்சியில் ஒரு சுத்து சுற்றி , பூண்டு போட்டு ஒரு சுத்து சுற்றி இறக்கி, தாளிக்கும் போது கடுகு ,வெந்தயம், வரமிளகாய் போட்டு தாளித்து, தக்காளி புளி கரைசல் ஊற்றி, நுரை வந்ததும் கருவேப்பிலை ,கொத்தமல்லி தூவி பெருங்காய தூள் சேர்த்து இறக்கினால் ரசம் ரெடி .இறக்கி வைத்து உப்பு சேர்க்கவும். இல்லாவிட்டால் ரசம் கடுத்து போய் விடும் .
0
Leave a Reply