25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில்ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு >> இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >>


“கார்பன் சமநிலை இராஜபாளையம்” என்னும் புதிய திட்டம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

“கார்பன் சமநிலை இராஜபாளையம்” என்னும் புதிய திட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்,தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் (TamilNadu Green Climate Company (TNGCC)) சார்பாக இராஜபாளையத்தில் “கார்பன் சமநிலை இராஜபாளையம்” என்னும் புதிய திட்டத்தினை 2041ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்துதல் தொடர்பான செயல் திட்ட அறிக்கையினை திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் திரு.ப.தேவராஸ்,இ.வ.ப., அவர்கள், தமிழ்நாடு காலநிலை மாற்ற ஆளுகைக்குழு உறுப்பினர் திருமதி  நிர்மலா ராஜா அவர்கள் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனவைர் வீ.ப.ஜெயசீலன் I A S.,அவர்கள் வெளியிட்டார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2023-24 சட்டமன்ற கூட்டத்தொடரில் ராஜபாளையம், கோயமுத்தூர், நீலகிரி மற்றும் ராமேஸ்வரம் நகராட்சிகள் கார்பன் சமநிலை நகராட்சிகளாக மாற்றுவதற்கு அறிவிப்புகள் வெளியிட்டு, “கார்பன் சமநிலை” (Carbon Neutral )   என்னும் புதிய திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்கள்.

அதனடிப்படையில் விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் (30.08.2023) அன்று தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம்(TamilNadu Green Climate Company (TNGCC))  சார்பாக,  மாநில மக்களுக்கு நிலையான மற்றும் காலநிலைக்கு ஏற்ற எதிர்காலத்தை உருவாக்கும் விதமாக  “கார்பன் சமநிலை இராஜபாளையம்” (Carbon Neutral Rajapalyam) என்னும் புதிய திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
“கார்பன் சமநிலை இராஜபாளையம்” என்னும் புதிய திட்டத்தினை 2041ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்துதல் தொடர்பான செயல் திட்ட அறிக்கையினை திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் திரு.ப.தேவராஸ்,இ.வ.ப., அவர்கள், தமிழ்நாடு காலநிலை மாற்ற ஆளுகைக்குழு உறுப்பினர் திருமதி  நிர்மலா ராஜா அவர்கள் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனவைர் வீ.ப.ஜெயசீலன்,.,அவர்கள் வெளியிட்டார்.
2041ஆம் ஆண்டுக்குள் இராஜபாளையம் நகராட்சி கார்பன் சமநிலையை அடையும் வகையில் இராஜபாளையத்தில் உள்ள பொதுமக்களிடம் இத்திட்டம் குறித்து கருத்துக்கள் பெறப்பட்டு அதனடிப்படையில் செயல்திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இராஜயபாளையத்தில், இந்த திட்டம் செயல்படுத்துவதற்கு ஏற்ற சூழ்நிலைகள் உள்ளது.இராஜபாளையத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள சஞ்சீவி மலையில் பசுமை பரப்பை அதிகரித்து அதன் மூலம் கார்பன் உமிழ்வை குறைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இராஜபாளையத்தில் உள்ள ஜவுளி உற்பத்தி நிறுவனங்களின் மின்சார பயன்பாட்டின் மூலம் ஏற்படும் கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்துவதற்கு  காற்றாலை மற்றும் சூரிய ஒளியால் பெறப்படும் மின்சாரத்தை பயன்படுத்தி குறைப்பதற்கான உத்திகள் தயாரிக்கப்பட்டுள்ளது.புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள், ஆற்றல் திறன்வாய்ந்த கட்டுமானங்கள், போக்குவரத்து, நிலையான கழிவு மேலாண்மை, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட  துறைகளுக்கு முன்னுரிமை கொடுத்து காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை மட்டுப்படுத்தும் நோக்கத்தில் இந்த செயல்திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News