25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >> விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு >>


“திருக்குறள் மாணவர் மாநாடு 2024
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

“திருக்குறள் மாணவர் மாநாடு 2024" நிறைவு நாள் நிகழ்ச்சி

திருக்குறள் மாணவர் மாநாடு 2024ஐ முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.  வெற்றி பெற்றவர்களின் விபரம்:
 குறும்படப் போட்டியில் வெற்றிபெற்றோர் விவரம்: முதலிடம் (ரூ.50 ஆயிரம்)- சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் ரவிச்சந்திரன், தங்கவேலு, 2ம் இடம் (ரூ.30 ஆயிரம்)- மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர் ஜோன் தயான். 3ம் பரிசு (ரூ.20 ஆயிரம்)- சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி மாணவர் ரஞ்சன் சசிக்குமார்.

புத்தியல் ஓவியப் போட்டியில் முதல் பரிசு (ரூ.25 ஆயிரம்)- கோவை ரவிராஜ் கல்லூரி மாணவர் சஞ்சய் கிருஷ்ணா, 2ம் பரிசு (ரூ.15 ஆயிரம்)- கிருஷ்ணகிரி பரம்வீர் கல்லூரி மாணவர் சீனிவாசன், 3ம் பரிசு (ரூ.10 ஆயிரம்) கோவை ரவிராஜ் கல்லூரி மாணவர் சுரேஷ்பாபு.

பேச்சுப் போட்டியில் முதல் பரிசு (ரூ.10 ஆயிரம்) விருதுநகர் மாணவர் சிவராஜன், 2ம் பரிசு (ரூ.7 ஆயிரம்) விருதுநகர் மாணவி வர்ஷாதேவி, 3ம் பரிசு (ரூ.5 ஆயிரம்) சிவகங்கை மாணவி கவியரசி.

கவிதை போட்டியில் முதல் பரிசு (ரூ.10 ஆயிரம்)- தஞ்சை மாவட்ட மாணவி ரிஷிவர்த்தினி, 2ம் பரிசு (ரூ.7 ஆயிரம்)- விருதுநகர் மாவட்ட மாணவி மகாதேவி, 3ம் பரிசு (ரூ.5 ஆயிரம்) திருச்சி மாவட்ட மாணவி நித்யஸ்ரீ.
ஓவியப் போட்டியில் முதல் பரிசு (ரூ.10 ஆயிரம்)- நாமக்கல் மாவட்டம் இளஞ்செழியன், 2ம் பரிசு (ரூ.5 ஆயிரம்) கரூர் மாவட்டம் சர்வஜித்.

வினாடி-வினா போட்டியில் முதல் பரிசு (ரூ.50 ஆயிரம்)- விருதுநகர் மாவட்டம், 2ம் பரிசு (ரூ.30 ஆயிரம்) தஞ்சை மாவட்டம், 3ம் பரிசு (தலா ரூ.5 ஆயிரம்) திருப்பூர், வேலூர் மாவட்டங்கள்.
பார்வையாளர்களுககான சிறப்பு பரிசுப் போட்டியில் (அறையிறுதி) முதல் பரிசு சுஷ்மிகா, 2ம் பரிசு பிரனவ் பாலாஜி, 3ம் பரிசு-ஜான்ஸிராணி (ஆசிரியை),

இறுதிச் சுற்றுக்கான சிறப்புப் பரிசு - விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தண்பபாணி.கலைப் போட்டியில் முதல் பரிசு (ரூ.50 ஆயிரம்) சென்னை, 2ம் பரிசு (ரூ.30 ஆயிரம்)- விழுப்புரம், 3ம் பரிசு (ரூ.20 ஆயிரம்)- சேலம்.

குறள் விளையாட்டுப் போட்டி (தமிழோடு விளையாடு) முதலிடம் (ரூ.5 ஆயிரம்) தேனி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவர் மோகன், 2ம் பரிசு (ரூ.3 ஆயிரம்)- திருநெல்வேலி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவி தியா, 3ம் பரிசு (ரூ.2 ஆயிரம்) ஆயன்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி யாழினி.

திருக்குறள் முற்றோதல் செய்த பெரியோர்களுக்கான போட்டியில் முதலிடம் செவல்பட்டி- முத்துக்குமாரசாமி, கண்மாய்சூரங்குடி- சினிவாசன், சிப்பிப்பாறை- ஜான்ஸிராணி.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.இராஜேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்  மரு.ஆர்.தண்டபாணி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா..வளர்மதி, அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News