25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில்ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு >> இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >>


, “விருதுநகர் மாவட்டக் கல்வி அறக்கட்டளை” அறிமுக விழா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

, “விருதுநகர் மாவட்டக் கல்வி அறக்கட்டளை” அறிமுக விழா

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள்/மாணவிகளுக்கு நல்ல திறமை மற்றும் கல்வியில் ஆர்வம் இருந்தும் பொருளாதார அடிப்படையில் வசதி குறைவு மற்றும் குடும்ப சூழ்நிலைகள் காரணமாக தங்களுடைய கல்வியினை தொடர முடியாமல் இருக்கும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில், “விருதுநகர் மாவட்டக் கல்வி அறக்கட்டளை” அறிமுக விழா மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S,அவர்கள் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.விருதுநகர் மாவட்ட கல்வி அறக்கட்டளை என்ற ஒரு சமூக அமைப்பு மாவட்ட நிர்வாகம், தொழில் முனைவோர்கள், தன்னார்வலர்கள் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இதனுடைய நோக்கம் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று, பெற்றோர்களின் வேலை வாய்ப்பின்மை, குடும்ப சூழ்நிலை மற்றும் பொருளாதாரத்தில் பின்;தங்கியவர்கள் போன்ற பல்வேறு காரணங்களால் பள்ளி செல்லாமல் இடைநின்ற குழந்தைகளை கண்டறிந்து அவர்களின் கல்வியினை தொடர உதவி செய்வதே இதன் நோக்கமாகும்.
பல்வேறு காரணங்களால் கல்வி கட்டணம் செலுத்துவதில் சிரமம் உள்ள மாணவர்கள், உதவி வேண்டி அதற்கான விண்ணப்பத்தை இந்த அறக்கட்டளையில் அளிக்கலாம். ஒரு துணைக்குழு அமைத்து பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, தகுதியானவர்களுக்கு உதவிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.இந்த அறக்கட்டளை குறித்த விழிப்புணர்வை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் ஏற்படுத்த வேண்டும். வரக்கூடிய கல்வி ஆண்டு முதல் இந்த அறக்கட்டளை மூலம் நிதியுதவி தேவைப்படும் மாணவர்களுக்கு உதவி செய்து, அவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும்.இந்த விருதுநகர் கல்வி அறக்கட்டளையானது ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூட்டம் நடத்தி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கல்வியினை மேம்படுத்துவது பற்றி விவாதம் மேற்கொள்ள வேண்டும். இந்த அறக்கட்டளை குறித்து ஆசிரியர் பெருமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி பொருளாதாரத்தில் பின்தங்கிய  மாணவர்கள்/ மாணவிகளின் கல்விக்கு உறுதுணையாக இருந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News