100 கோடி சம்பளம் வாங்கும் அட்லீ.
மும்பை: ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்க சில ஆண்டுகள் மும்பையிலேயே முகாமிட்டு இருந்த அட்லீ அங்கே ஷாருக்கான் நிறுவனத்துடன் இணைந்து பயணித்ததில் ஏகப்பட்ட பிசினஸ்களை கற்றுக் கொண்டதாக கூறுகின்றனர். ஷாருக்கான் தயாரிப்பில் அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி இதுவரை வசூல் ரீதியாக நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. இயக்குநர் ஷங்கருக்கே கிடைக்காத வாய்ப்பாக பாலிவுட்டில் முதல் படத்திலேயே தனது கொடியை நாட்டி விட்டார்.
ஜவான் படத்தை முடித்த கையோடு பாலிவுட்டில் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தெறி படத்தின் இந்தி ரீமேக்கை உருவாக்கி வருகிறார். அந்த படத்தில் பாலிவுட் நடிகர் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது, மும்பையில் சொந்தமாக பெரிய அலுவலகம் ஒன்றையே அட்லீ உருவாக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக இருந்த அட்லீ ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கினார். அந்த படம் ஹிட் அடித்த நிலையில், மெர்சல் மற்றும் பிகில் உள்ளிட்ட படங்களை இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த அட்லீ, தற்போது ஜவான் படத்தின் மூலம் இண்டஸ்ட்ரி ஹீட் கொடுத்துள்ளார்.
இயக்குநர் ஷங்கரே இவ்வளவு சம்பளம் வாங்குவாரா என தெரியவில்லை. அட்லீ 100 கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்ததாக விஜய் மற்றும் ஷாருக்கானை வைத்து பிரம்மண்டமாக ஒரு படத்தை இயக்க திரைக்கதை வடிவமைத்து வருகிறார். 10,000 சதுர அடியில் அலுவலகம்: ஏற்கனவே மும்பையில் வீடு வாங்கியுள்ள அட்லீ தற்போது அங்கே 40 கோடி செலவில் 10 ஆயிரம் சதுரடியில் அலுவலகம் ஒன்றை உருவாக்கி இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து பாலிவுட்டில் பல படங்களை தயாரித்து மிகப்பெரிய லாபத்தை அடைவதற்கான அத்தனை வழிகளையும் அட்லீ அறிந்து வைத்துள்ளார் எனக் கூறுகின்றனர்.
காப்பி இயக்குநர் என தொடர்ந்து ட்ரோல் செய்து வந்தாலும் அட்லீயின் மேக்கிங்கை பார்த்து மிரண்டு போய் தான் முன்னணி நடிகர்கள் அவரது இயக்கத்தில் நடிக்க தவமாய் தவம் கிடந்து வருகின்றனர். ஷாருக்கானுக்கு ஜவான் படத்தின் மூலம் பெரிய சம்பவம் செய்த அட்லீ, என் அண்ணனுக்கு நான் தான் செய்வேன் என அடுத்து ஷாருக்கானையும் துணைக்கு அழைத்துக்கொண்டு பான் வேல்ர்ட் படத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன: அட்லீயின் இந்த அசுர வேக வளர்ச்சியை பார்த்து பாலிவுட்டில் பல பிரபலங்களே பொறாமைப்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர். அவர்களை அங்கே சமாளிக்கவே தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி பல முன்னணி நடிகர்களை தனது நண்பர்களாக மாற்றும் முயற்சியில் அட்லீ ஈடுபட்டு வருகிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன..
0
Leave a Reply