25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >> விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு >>


மேட்டமலை கிருஷ்ணசாமி நாயுடு கல்லூரியில்  தேர்தல் பிரிவின் மூலம் 14-வது தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சிகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மேட்டமலை கிருஷ்ணசாமி நாயுடு கல்லூரியில் தேர்தல் பிரிவின் மூலம் 14-வது தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சிகள்

விருதுநகர்  மாவட்டம், சாத்தூர் வட்டம், மேட்டமலை கிருஷ்ணசாமி நாயுடு கல்லூரியில்  (25.01.2024) தேர்தல் பிரிவின் மூலம் 14-வது தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சிகள் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.,ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மேலும், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெற்ற பதாகை தயார் செய்தல், பாட்டு, வினாடி வினா, நடனம் உள்ளிட்ட போட்டிகளில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச்சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் வழங்கினார்.
     இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஒரு அங்கம் தேர்தல் ஆணையம். இந்திய தேர்தல் ஆணையம் தோற்றுவிக்கப்பட்ட நாளான ஜனவரி 25ம் நாளினை தேசிய வாக்காளர் தினமாக 2011ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்களிடையே வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.இந்தியாவில் குடிமகனாக பிறக்கக்கூடிய ஒவ்வொருவரும் முதல் குடிமகனிலிருந்து ஒரு கிராமத்தின் கடைக்கோடியில் வசிக்கக்கூடிய ஒரு சாதாரண நபர் வரை என அனைவருக்கும்  வாக்குரிமை உண்டு. இந்த வாக்குரிமை அனைவருக்கும் சமமானது.  இந்த வாக்குரிமை என்பது இன்று நமக்கு சாதாரணமாக  தெரியலாம். ஆனால் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பாக இந்த வாக்குரிமை என்பது அனைவருக்கும் கிடைக்கவில்லை. பெண்களுக்கும் கூட வாக்குரிமை இல்லாத நிலைமை இருந்தது.
இந்த 18 வயது நிரம்பிய அனைவருக்கும் வாக்குரிமை என்ற உரிமையை பெறுவதற்கு நாம் கடந்து வந்த ஜனநாயக பாதை என்பது கடினமானது.சுமார் 2000 ஆண்டு காலமாக மன்னராட்சி இருந்து வந்த நிலையில், 75 ஆண்டுகளுக்கு முன்புதான், சட்டத்தின் முன்பாக அனைவரும் சமம், 18 வயது  நிரம்பிய அனைவருக்கும் வாக்குரிமை என்ற  ஜனநாயக உரிமையை பெற்றிருக்கிறோம்.
இந்த ஜனநாயகத்தில் தேர்தல் என்பது மிக  முக்கியமானது. அதில் நமது இந்திய தேர்தல் ஆணையம் இரண்டு விஷயங்களை வலியுறுத்தி வருகிறது. சமீப காலமாக நடைபெற்ற தேர்தல்களில் பணம், பரிசு பொருள் அளித்து வாக்கு பெறுவது, வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுப்பது ஆகிய இரண்டும் முக்கியமான பிரச்சினையாக இருக்கிறது என தெரிவிக்கிறது.இதை தடுப்பதற்காக தான் பல்வேறு நம்பிக்கை நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தலைமை தேர்தல் ஆணையர் அவர்கள் குறிப்பிடுகிறார்.
நாடாளுமன்றத் தேர்தல் சில மாதங்களில் வரவுள்ளது. இந்த தேர்தலில் பணம் பெற்றோ, பரிசு பொருள்கள் பெற்றோ வாக்களிக்கக் கூடாது. நியாயமான நேர்மையான தேர்தல் நடைபெற வேண்டும். அதுவும் குறிப்பாக இளம் வாக்காளர்கள் முதன் முதலில் வாக்களிக்க இருக்கும் வாக்காளர்களுக்கு  வாக்களிக்கும் உரிமைகள் கிடைக்கப்பட்டுள்ளன. இந்த உரிமைகள் வரும் பொழுது தங்களுக்கான பொறுப்புகளும் கடமைகளும் அதிகரிக்கிறது.
இந்த பொறுப்புணர்வுகளை நீங்கள் சரியாக புரிந்து கொண்டு ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். மேலும், வாக்குப்பதிவு தினத்தின் போது, எந்த ஒரு நிலையிலும் தங்கள் வாக்கினை பதிவு செய்வதில் உறுதியாக இருக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட  ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.முன்னதாக சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில்,  நடைபெற்ற வாக்காளர் இருசக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து,  14- வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், அரசு அலுவலர்கள், கல்லூரி முதல்வர்,  பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News