2வது வகுப்பு ரயில் டிக்கெட் மூலம் முதல் வகுப்பில் பயணிக்கலாம்.
பெரும்பாலான மக்கள் ரயிலில் பயணம் செய்வதை விரும்புகின்றனர்ரயில் பயணத்தை விரும்பும் நிலையில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் பல சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது.. காரணம் குறைந்த செலவில் மிக நீண்ட தூரம் பயணிக்க ரயில் பயணம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதன் காரணமாக தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணிக்கின்றனர்.
சில சலுகைகள் குறித்து பலருக்கும் தெரியாது. இந்திய ரயில்வே விதிகளின்படி, ஒரு பயணி எந்த வகுப்பிற்கு டிக்கெட் வாங்குகிறாரோ அந்த வகுப்பின் பெட்டியில் மட்டுமே பயணிக்க முடியும். ஆனால் பல பயணிகளுக்கு தெரியாத ஒரு சலுகை உள்ளது. அதாவது குறைந்த கட்டண டிக்கெட் எடுத்த பயணிகளும் முதல் வகுப்பில் பயணம் செய்யலாம் என்பதுதான். இவ்வாறு நீங்கள் செய்யும்போது டிக்கெட் பரிசோதகர் உங்களை ரயிலில் இருந்து இறங்க சொல்லவோ, அபராதம் விதிக்கவோ முடியாது. ஆனால் அதற்கு சில விதிமுறைகள் உள்ளன.
இந்தியாவில் தினமும் சராசரியாக1.85 கோடி பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். இதில் ஏசி, ஸ்லீப்பர், பொது வகுப்பு பட்டியல் என அனைத்தும் அடங்கும். ஏசி வகுப்பு பெட்டியில் பெண் பயணி ஒருவர் தனியாக பயணம் செய்கிறார். அவரது உதவியாளர் இரண்டாம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இப்போது ஏசி பெட்டியில் தனியாக பயணிக்கும் பெண் பயணிக்கு துணையாக இரண்டாவது வகுப்பில் பயணிக்கும் பெண் பயணி ஏசி பெட்டியில் பயணிக்க அனுமதிக்கப்படுவார். அதன்படி இரவு 8 மணி முதல் காலை8 மணி வரை ஏசி பெட்டியில் பயணிக்க அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் பெண் பயணிகளுக்கு உதவியாளர் ஒரு பெண்ணாக இருக்க வேண்டும் என்று நிபந்தனை உள்ளது. ஆண் உதவியாளர்களுக்கு இது பொருந்தாது.
0
Leave a Reply