முகத்தில் உள்ள கருப்பு திட்டுக்கள் நீங்க 3 டிப்ஸ்
சிலருக்கு முகத்தில், மூக்கில், கண்ணங்களில் கருப்பு நிற திட்டுகள் காணப்படும். இது ஒரு நோய் அல்ல, சிறிய மச்சம் போல் ஆரம்பித்து முகத்தில் வேகமாக பரவிவிடும்.பொதுவாக 20-35 வயதுள்ளவர்களுக்கு வரக்கூடிய தற்காலிகப் பிரச்சனையாக இருந்தாலும், சிலருக்கு மட்டும் மீண்டும் மீண்டும் வரலாம்.
5-7 பாதாமை நீரில் ஊறவைத்து, தோல் நீக்கி, மைய அரைத்து, அதனுடன் தேன் கலந்து முகத்தில் பூசி, காய்ந்த பிறகு நீரில் முகத்தை கழுவவேண்டும், தேனும், பாதாமும் சேர்ந்த கலவை வெகு சீக்கிரத்தில் மங்கு மறைந்து விடும்.
ஜாதிக்காய், சந்தனம், வேப்பங்கொழுந்து சம அளவு எடுத்து நீர்விட்டு மைய அரைத்து, முகத்தில் கருப்பு திட்டுகள் இருக்கும் இடத்தில் பசை போல் தடவவும், காய்ந்த பிறகு முகத்தை கழுவ வேண்டும், சில முறை இதை செய்து வந்தால், கருப்பு திட்டுகள் மறையும்.
1 ஸ்பூன் தக்காளி சாறு, 1 ஸ்பூன் தயிர், 2 ஸ்பூன் ஓட்ஸ், இவற்றை பேஸ்ட் போல் செய்து , சருமத்தில் இருக்கும் கருப்பு திட்டுகள் மீது நன்றாக தேய்த்து காய்ந்தபின் கழுவவும், வாரத்தில் 2-3 முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்
0
Leave a Reply