3212 மாவட்டம் ரோட்டரி கிளப் ஆஃப் இராஜபாளையத்தின்பதவி ஏற்பு விழா
3212 மாவட்டம் ரோட்டரி கிளப் ஆஃப் இராஜபாளையத்தின்பதவி ஏற்பு விழா 9.07. 2023 ஞாயிறு அன்று மிகச் சிறப்பாக நடை பெற்றது.
தலைவராக Rtn. பார்த்தசாரதி, செயலராக Rtn. ஆனந்தி, பொருளாளராக Rtn.K.S.வெங்கட் ராஜா, அவர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
IPDG .Rtn. இதயம் முத்து அவர்கள் முதன்மை விருந்தினராகவும், A2B - K.T. ஸ்ரீனிவாசராஜா, A2B - K.S. ஆனந்தி அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் மற்றும் முக்கியமான ரோட்டரி அன்பர்களும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். இன்று புதிதாக 5 உறுப்பினர்கள் இணைந்தனர். இன்று சேவைத் திட்டங்களாக 9 பேருக்கு தையல் இயந்திரங்கள் , 13 பேருக்கு அரிசிப்பை, பெட்ஷீட், வேஷ்டி, துண்டு, சேலைகள், மற்றும் இரண்டு பள்ளி மாணவர்க்கு நோட்டு, புத்தகங்கள், அமர்சேவா சங்கம், ஓம் பிரணவாஸ்ரம் அமைப்புகளுக்கு நிதி உதவி, +2 வில், நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற 12 பள்ளிகளுக்கு பாராட்டுக் கேடயங்கள் வழங்கப் பட்டன. வாழ்த்துரைகளோடு விழா இனிதே நிறைவு பெற்றது.
0
Leave a Reply