69வது தேசிய திரைப்பட விருதுகள் 2023
கடந்த2021ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் ஆகஸ்டில் அறிவிக்கப்பட்டன., புதுடில்லியில்,69வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடந்தது. இதில், திரையுலக பிரபலங்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருது வழங்கினார்.பழம்பெரும் நடிகை வஹீதா ரஹ்மானுக்கு, சினிமா துறையின் உச்சபட்ச விருதான, தாதாசாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருதுவழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, சிறந்த நடிகருக்கான விருது, புஷ்பா படத்துக்காக அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட் டது. சிறந்த நடிகையருக்கான விருது, அலியா பட், கிருத்தி சனோன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. சிறந்த திரைப்படத்துக்கான விருது, ராக்கெட்ரி படத்தை இயக்கியதற்காக, நடிகர் மாதவனுக்கு வழங்கப்பட்டது. தேவிஸ்ரீ பிரசாத், ஆஸ்கர் விருது வென்ற கீரவாணி ஆகியோருக்கு, சிறந்த இசையமைப்பாளருக்கான விருது வழங்கப்பட்டது.
சிறந்த பின்னணி பாடகிக்கான விருதை இரவின் நிழல் படத்துக்காக பாடகி ஸ்ரேயா கோஷல் பெற்றார். கருவறை குறும்படத்துக்கு இசையமைத்த ஸ்ரீகாந்த் தேவா விருது பெற்றார். கடைசி விவசாயி திரைப்படம் இரண்டு பிரிவில் தேசிய விருது வென்றது. படத்தின் இயக்குனர் மணிகண்டன் தேசிய விருதைப் பெற்றார்.இப்படத்தில் தாத்தா கதாபாத்திரத்தில் நடித்த நல்லாண்டிக்கும் சிறப்பு விருதும் அறிவிக்கப்பட்டிருந்தது. நல்லாண்டி மறைந்ததால், அவர் குடும்பத்தினர் சார்பில் விருதை இயக்குனர் மணிகண்டன் பெற்றார். ஆர்ஆர்ஆர் பட இயக்குனர் ராஜமவுலி உள்ளிட்டோர் தேசிய விருதுகளை பெற்றனர்.
0
Leave a Reply