ஆறுகளின் நாடு
நாட்டின் இயற்கை வளத்துக்கு ஆறுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலகில் அதிக ஆறுகள் உள்ள நாடு வங்கதேசம். இது 'ஆறுகளின் நாடு' என அழைக்கப்படுகிறது. அங்கு 907 ஆறுகள் ஓடுகின்றன. இதில் பிரம்மபுத்திரா, கங்கை, ரெய்டாக்,மஹானந்தா, தீஸ்தா, மேக்னா முக்கியமானவை. வங்கதேசத்தில் ஓடும் ஆறுகளில் இந்தியாவில் இருந்து 54,மியான்மரில் இருந்து 3 ஆறுகள் பாய்கின்றன. கிளை நதிகள் உட்பட மொத்த நீர்வழித்தடங்களின் தூரம் 24 ஆயிரம் கி.மீ. அதே போல வங்கதேசத்தில் தான் உலகின் பெரிய ஆற்று டெல்டா உள்ளது. இதன் பெயர் கங்கை டெல்டா.
0
Leave a Reply