வயது முதிர்ச்சியின் காரணமாக முகச்சுருக்கத்தை தடுக்கும் ஃபேஸ் க்ரீம்
வயது முதிர்ச்சியின் காரணமாக முகத்தில் சுருக்கங்கள் விழ ஆரம்பிக்கும்.ஒருசிலருக்குஇளம்வயதிலேயே முகத்தில் சுருக்கங்கள் ஏற்படும் சூழ்நிலை உண்டாகும். எந்த வயது சுருக்கமாக இருந்தாலும் அந்த முகச்சுருக்கத்தை நீக்கி இளமையாக பார்த்துக் கொள்ள உதவக்கூடிய ஒரு ஃபேஸ் க்ரீம்.
முதலில் ஒரு ஆரஞ்சு பழத்தை எடுத்து,வெதுவெதுப்பான நீரில் பேக்கிங் சோடாவை போட்டு நன்றாக தேய்த்து கழுவிக்கொள்ளுங்கள். பிறகு இந்த ஆரஞ்சு பழத் தோலை மட்டும் துருவி,ஒரு கேரட்டைதுருவி எடுத்துக் கொள்ளுங்கள்.. இவை இரண்டையும் எடுத்து ஒரு கண்ணாடி பௌலில் போட்டு, ஆறு பிரியாணி இலையை பொடி பொடியாக உடைத்து சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு தேங்காய் எண்ணையும், நான்கு டேபிள் ஸ்பூன் அளவிற்கு ஆலிவ் எண்ணையும் சேர்க்க வேண்டும். இப்பொழுது இந்த கண்ணாடி பவுலை டபுள் பாய்லிங் மெத்தடில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதில் இந்த பவுலை வைத்து அடுப்பில் வைத்து விட வேண்டும்.
குறைந்த தீயில்40 நிமிடம் இருக்க வேண்டும். பிறகு இதை எடுத்து ஒரு வடிகட்டியை பயன்படுத்தி வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். வடிகட்டிய இந்த எண்ணெயை ஃப்ரீசரில்வைத்து விட வேண்டும். அது கிரீம் பதத்திற்கு மாறிவிடும். இப்பொழுது இந்த கிரீமை எடுத்து முகத்தில் இரவு படுக்க செல்வதற்கு முன் தடவுவதன் மூலம் மிகவும் நல்ல பலன் கிடைக்கும். இதில் சேர்க்கப்பட்டுள்ள ஆரஞ்சு பழத்தோல் வயது முதிர்ச்சியை தடுப்பதற்கு உதவுகிறது. மேலும் முக வறட்சியை நீக்கி சுருக்கங்கள் வராமல் பாதுகாக்கும்.ஒருமுறைஇந்தக்ரீமைஉபயோகப்படுத்தினாலேயே உடனடியாக முகம் மிகவும் மிருதுவாக தோன்றுவதை நம்மால் கண்கூடாக காண முடியும்
முகச்சுருக்கமே வயது முதிர்ச்சியை காட்டக்கூடிய ஒரு காரணியாக திகழ்வதால் இந்த கிரீமை பயன்படுத்தி முக சுருக்கத்தை நீக்கி என்றும் இளமையாக தென்படுவோம்.
0
Leave a Reply