ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்கள் வழங்கும் விழா
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னையில் நடைபெற்ற விழாவில், தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் உன்னதத் திட்டத்தின் கீழ் தூய்மைப் பணியாளர்களுக்கு 100 நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்களை வழங்கி, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தின் கீழ் பல்வேறு கடனுதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்கள்.
அதனைத்தொடர்ந்து, விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் (06.12.2024) ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S ., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.தங்கப்பாண்டியன் அவர்கள், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் 529 பயனாளிகளுக்கு ரூ.1.71 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் 39 பயனாளிகளுக்கு ரூ.11.70 இலட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டு மனைப்பட்டாக்களையும், 30 பயனாளிகளுக்கு ரூ.2.54 இலட்சம்; மதிப்பீட்டில் இலவச தையல் இயந்திரங்களையும், 16 பயனாளிகளுக்கு ரூ.1.05 மதிப்பீட்டில் இலவச தேய்ப்புப் பெட்டிகளையும், 237 பயனாளிகளுக்கு ரூ.71.10 இலட்சம் மதிப்பீட்டில் இணையவழி கணினி பட்டாக்களையும், 32 பயனாளிகளுக்கு புதிரை வண்ணார் நலவாரிய அட்டைகளையும்,
மாவட்ட முன்னோடி வங்கி சார்பில், 10 பயனாளிகளுக்கு ரூ.10.33 இலட்சம் மதிப்பீட்டில் பால் பண்ணை அமைப்பதற்கான கடன் உதவிகளையும், மாவட்ட தொழில் மையம் மூலம் அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன் திட்டத்தின் கீழ் 7 பயனாளிகளுக்கு ரூ.57 இலட்சம் மதிப்பீட்டில் கடன் உதவிகளையும், தாட்கோ சார்பில், 17 பயனாளிகளுக்கு ரூ.13.83 இலட்சம் மதிப்பீட்டில் கடன் உதவிகளையும், வேளாண்மைத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டில் விதைகள், உரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும், தோட்டக்கலைத்துறை சார்பில் 12 பயனாளிகளுக்கு ரூ.47,500 மதிப்பீட்டில் விதைகளையும், 54 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும், நகராட்சி நிர்வாகம் சார்பில் 50 தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.1.75 இலட்சம் மதிப்பீட்டில் பாதுகாப்பு உபகரணங்களையும், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 20 தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.70 ஆயிரம் மதிப்பீட்டில் பாதுகாப்பு உபகரணங்களையும் என மொத்தம் 529 பயனாளிகளுக்கு ரூ.1.71 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
வாழ்ந்த காலத்திலேயே சாதித்தவர் தான் மறைந்த பின்பும் வாழ்பவர். அப்படி மறைந்த பின்பும் வாழக்;கூடிய தலைவர்களின் முக்கியமான தலைவர் அண்ணன் அம்பேத்கர் அவர்கள். இன்று ஒரு சட்டத்தின் வட்டத்திற்குள் அதை பின்பற்றி ஒரு ஒழுக்கத்தோடு வாழ்கின்றோம் என்று சொன்னால் அதற்கு அரசியல் அமைப்பு சட்டம் தான் அடிப்படை காரணம். அந்த அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துக் கொடுத்த அண்ணல் அம்பேத்கர் அவர்களின் மறைந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும்.
அதே நேரத்தில் அவர் காட்டிய சமுதாய ஏற்றத்தாழ்வு மற்றும் அடிமைத்தனம் இல்லாத சமுதாயத்தை உருவாக்க முயற்சிகளை செய்தவர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள். அவர் வழியிலே சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டவர், ஒடுக்கப்பட்டவர் என இல்லாமல், எல்லோரும் சமம், எல்லோரும் ஒன்று தான், எல்லோரும் மனிதர்கள் தான், எல்லோரும் வாழ பிறந்தவர்கள் தான் என்ற எண்ணத்தையும், உணர்வையும் ஏற்படுத்தக்கூடிய நாளாக இந்த நாள் இருக்க வேண்டும்.தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மக்களை தொழில் முனைவோராக உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் மானியத்திலான கடனுதவிகளை வழங்குகிறது. இதையெல்லாம் சரியாக பயன்படுத்திய எதிர் காலத்தில் நல்ல ஒரு தொழில் முனைவோராக வேண்டும் என தெரிவித்தார்.
மனிதனுடைய உண்மையான முன்னேற்றம் என்பது சமூகத்தில் அனைவரும் சமமாக இருக்க வேண்டும். சமூக முன்னேற்றத்திற்கு மிக இன்றியமையாது என்பது பொருளாதார முன்னேற்றம். மனிதன் பொருளாதாரத்தில் வலிமை அடைகின்ற போதுதான் அவன் தன்னம்பிக்கையோடு இந்த சமுதாயத்தில் வாழ முடியும் என்ற கொள்கையின் அடிப்படையில், புதிய தொழில் முனைவோர்களை உருவாக்குவதற்காக பல்வேறு நலத்திட்டங்களை, பல்வேறு கடன் உதவிகளை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.
அதிலும் குறிப்பாக சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்பதற்காக பல்வேறு துறைகளின் சார்பாக பல்வேறு திட்டங்களின் சார்பாக புதிய கடன்கள் மூலம் தொழில் முனைவோர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நமது மாவட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள அனைத்து திட்டங்களின் இலக்குகள் முழுமையாக அடையப்பட்டிருக்கின்றன.
மேலும். தொழில் முனைவதற்காக கடன் உதவிகள் வருகின்ற பொழுது, அவ்வப்போது அனைத்து துறைகள் மற்றும் வங்கிகளை ஒருங்கிணைத்து அவற்றை முழுமையாக தொடர்ந்து செயல்படுத்துவும்.இன்றைய நாளில் மிக முக்கியமான திட்டமாக அடிப்படை தொழிலாளர்களாக இருக்கக்கூடியவர்கள் ஒரு உரிமையாளர்களாக, முதலாளியாக, ஒரு தொழில் முனைவராக உருவாக வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இந்த திட்டத்தினுடைய பயனை முழுமையாக பெற்று பொருளாதார மேம்பாடு அடைய வேண்டும் என தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திரு.ரமேஷ், சிவகாசி மாநகராட்சி ஆணையாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி, சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.சிவகுமார், விருதுநகர் நகர்மன்றத்தலைவர் திரு.ஆர்.மாதவன், விருதுநகர் நகராட்சி ஆணையாளர் செல்வி சுகந்தி உட்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply