தமிழ்நாடு நாள் விழா சூலை 18-யை முன்னிட்டு மாபெரும் மாணவர் பேரணி மற்றும் சிறப்பு புகைப்படக் கண்காட்சி
தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி, சூலை 18 அன்று தமிழ்நாடு நாளாக அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினம் குறித்து இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் பள்ளி மாணவ, மாணவியர்களின் விழிப்புணர்வு பேரணி, சிறப்பு புகைப்படக் கண்;காட்சி நடைபெறவுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு நாள் சூலை 18-யை முன்னிட்டு(18.07.2023) விருதுநகரில் உள்ள தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபத்தில் உள்ள அன்னாரது சிலைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படவுள்ளது.
அதனைத்தொடர்ந்து, சுமார் 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் மாணவர் பேரணி துவக்கி வைக்கப்படவுள்ளது.தொடர்ந்து, விருதுநகர் தேசபந்து மைதானத்தில் தமிழ்நாடு நாளை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்பட கண்காட்சி அரங்கு திறந்து வைக்கப்படவுள்ளது.
எனவே, பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் இந்த தமிழ்நாடு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் I A S, அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.
0
Leave a Reply