பச்சை காய்கறிகளை சமைக்கும் போது சிறிதளவு எலுமிச்சைசாறு பிழிந்தால் காய்களின் நிறம் மாறாது.
பொங்கல் செய்யும் போது நீர் அதிகமாகி விட்டால், அதில் வறுத்த ரவையை ஒன்று அல்லது இரண்டு கைப்பிடி போட்டு கிளறினால் பொங்கல் நன்கு சேர்ந்து கெட்டியாகி விடும்.
இட்லிக்கு அரைத்த மாவில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டுக் கலந்து வைத்தால், இட்லி மிருதுவாக இருக்கும்.
உளுந்து வடை செய்யும் போது ஒரு கைப்பிடி கொத்தமல்லித்தழையை சேர்த்து ஆட்டி செய்தால் நறுக்கிப் போட்டு செய்வதை விட வாசனையாக இருக்கும்.
ரவா தோசை செய்யும் போது 2 தேக்கரண்டி கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென சுவையாக இருக்கும்.
பச்சை காய்கறிகளை சமைக்கும் போது சிறிதளவு எலுமிச்சைசாறு பிழிந்தால் காய்களின் நிறம் மாறாது.
0
Leave a Reply