இராஜபாளையத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி நடைபெற்ற மோட்டார் சைக்கிள் வாகன விழிப்புணர்வு பேரணி
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், சத்திரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் (23.03.2024) மக்களவைத் தேர்தல்- 2024 யை முன்னிட்டு, வாக்காளர் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்ட மோட்டார் வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தொடங்கி வைத்து, இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.மக்களவைத் தேர்தல்- 2024 நடைபெறயுள்ளதையொட்டி 18 வயது நிரம்பிய முதல் முறை வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள், அதிக முறை வாக்களித்த மூத்த வாக்காளர்கள், திருநங்கைகள் என அனைத்து தரப்பு வாக்காளர்களிடையே 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துக் கூறும் வகையில், விழிப்புணர்வு பேரணி, கையெழுத்து இயக்கம், ரங்கோலி வரைதல் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, சத்திரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்காளர் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்ட மோட்டார் வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர்,மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்து, இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்த பேரணியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை, ஊராட்சித்துறை, நகராட்சித்துறை, கூட்டுறவுத்துறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து, வாக்களிப்பது நமது உரிமை, கையூட்டு பெறாமல் வாக்களிக்க வேண்டும். நம்மை ஆள்பவரை நாமே தீர்மானிக்க வேண்டும். ஜனநாயக கடமையை நாம் ஆற்ற வேண்டும் என்ற வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி சென்று, சத்திரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியிலிருந்து தொடங்கி, முக்கிய சாலைகள் வழியாக இராஜபாளையம் வரை சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மேலும், வாக்காளர்கள் அனைவரும் 100 சதவிகிதம் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்றும், நேர்மையான, நியாயமான, வெளிப்படை தன்மையுடன் தேர்தல் நடைபெறுவதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
0
Leave a Reply