நகரும் பனிப்பாறை
லண்டனை விட இரு மடங்கான, உலகின் பெரிய பனிப்பாறை அண்டார்டிகாவில் நகரத்தொடங்கியுள்ளது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்த பனிப்பாறையின் பெயர் 'ஏ23ஏ'.
இதன் பரப்பளவு3988 சதுர கி.மீ. இதன் தடிமன்1342 அடி. இது1986 ஆகஸ்டில் உடைந்து நகர்ந்தது.
நுாற்றுக்கணக்கான கி.மீ., துாரம் நகர்ந்ததும்1993ல் நின்றது. தற்போது30 ஆண்டுக்குப்பின் மீண்டும் நகரத் தொடங்கியுள்ளது. இதற்கு முன் அண்டார்டிகாவில் 'ஏ76' பனிப்பாறை இருந்தது.
இதன் பரப்பளவு 4317 சதுர கி.மீ. இது மூன்று பாகமாக உடையும் வரை இதுதான் உலகின் பெரிய பனிப்பாறையாக விளங்கியது.
0
Leave a Reply