25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில்ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு >> இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >>


வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தினை செயல்படுத்திட ஏதுவாக வட்டார மேம்பாட்டு உத்திகள் தயாரிப்பு செய்தல் தொடர்பான ஒருநாள் பயிற்சி கருத்தரங்கம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தினை செயல்படுத்திட ஏதுவாக வட்டார மேம்பாட்டு உத்திகள் தயாரிப்பு செய்தல் தொடர்பான ஒருநாள் பயிற்சி கருத்தரங்கம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்   (02.03.2024) வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தினை (Focus Blocks Development Programme)  செயல்படுத்திடும் பொருட்டு, வட்டார  மேம்பாட்டு உத்திகள் தயாரிப்பது தொடர்பாக  விருதுநகர் மண்டலத்திலுள்ள விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, மதுரை, தேனி, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டத்தைச் சேர்ந்த 12 வட்டாரங்களுக்கு வளர்ச்சி திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திட ஏதுவாக மாவட்ட அளவிலான துறை சாரந்த அலுவலர்களுக்கான  ஒருநாள் பயிற்சி கருத்தரங்கத்தை விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.  
மாநில அளவில் பல்வேறு வளர்ச்சி குறியீடுகளில் பின் தங்கியுள்ள 50 வட்டாரங்களை தேர்ந்தெடுத்து அரசின் பல்வேறு துறைகளின் திட்டங்களை ஒருங்கிணைத்து வாழ்வாதார குறியீட்டினை உயர்த்தும் நோக்குடன் வளமிகு வட்டார வளர்ச்சி திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்படவுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 11 வட்டாரங்களில் திருச்சுழி மற்றும் நரிக்குடி  வட்டாரம் வளர்ச்சி குறியீட்டில் பின்தங்கிய வட்டாரமாக கண்டறியப்பட்டுள்ளது.  அதே போல் விருதுநகர் மண்டலத்தில் உள்ள விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, மதுரை, தேனி, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டத்தைச் சேர்ந்த 12 வட்டாரங்கள் பின்தங்கிய வட்டாரங்களாக கண்டறியப்பட்டுள்ளது.  
இந்த வளமிகு வட்டார வளர்ச்சி திட்டம் என்பது உலக அளவில் இருக்கக்கூடிய ஒரு திட்ட மாதிரி. எப்போதுமே இந்த வளர்ச்சி பணிகளை மேற்கொள்கின்றபோது புவியியல் அமைப்புகளுக்கு இடையே ஒத்த வளர்ச்சி விகிதம் என்பது எப்போதுமே அமையாது. தமிழ்நாட்டினுடைய மனித வளர்ச்சி குறியீடு(Human Development Index) ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்டத்தினுள்ள பகுதிகளுக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. அந்தந்த பகுதியினுடைய தொழில் வளம், அங்கு இருக்கக்கூடிய வேலைவாய்ப்புகள், அங்கு இருக்கக்கூடிய மனித வள மேம்பாடு வாய்ப்புகள் இவற்றையெல்லாம் பொறுத்துதான் அமையும்.  இந்த பிராந்திய வேறுபாடுகள்(Regional Disparities) என்பது சிறிய அளவில் இருந்து பெரிய அளவிலான நிலப்பரப்பளவுகள் வரையிலும் மிகப் பொதுவானது. இதை நிரப்புவதற்காக நாம் எப்படி செயல்படப் போகிறோம் என்பதுதான் முக்கியம்.
எப்பொழுதுமே நம்முடைய வளங்கள் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்த பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற வளர்ந்த நாடாக இருந்தாலும், வளரக்கூடிய நாடாக இருந்தாலும் அல்லது மிகவும் பின்தங்கிய வளர்ச்சி இருக்கக் கூடிய உலக நாடுகள் எதுவாக இருந்தாலும் அவர்களுக்குண்டான வளங்களை பொருத்து, தேவைகளும் அதற்கு ஏற்ற மாதிரி அமைந்திருக்கும்.
 நமக்கான வளங்களை பயன்படுத்தி இந்த பிராந்திய வேறுபாடுகளை(Regional Disparities) எப்படி போக்குவது என்பது குறித்தும், உலக அளவில் வளர்ச்சியை எப்படி உறுதி செய்வது என்பது குறித்தும் விவாதம் உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கின்றது.
அதில் இப்பொழுது தமிழ்நாட்டில் 388 வட்டாரங்களில் 15 சதவீதமான 50 வட்டாரங்களை தேர்ந்தெடுத்து, அதற்கென்று நோக்கமாக திட்டத்தை தயாரித்து, குறைவான வளங்களை பயன்படுத்தி அதிகமான மக்களுக்கு நன்மைகள் கிடைக்கக்கூடிய அளவில் திட்டங்களை தீட்டுவது. அதே நேரத்தில் வளங்கள் மிகவும் குறைவாக இருக்கும் பட்சத்தில் போட்டிகள் அதிகமாக இருக்கும். அப்போது ஒரு தெளிவான திட்டமிடுதல் என்பது அந்த வட்டாரத்துக்கு மிகவும் முக்கியம். அதிக நிதிகளை ஒதுக்கி திட்டங்களை மேற்கொள்வதை விட அங்கு இருக்கக்கூடிய வளங்களை பயன்படுத்தி மேற்கொள்ள வேண்டும் என்ற  அடிப்படையில் பல்வேறு வளர்ச்சித்துறைகளை ஒருங்கிணைத்து மிக தெளிவாக திட்டமிட வேண்டும்.
அந்தப் பகுதிகளுக்கு தேவையான பொதுவான திட்டங்களை முக்கியத்துவத்தின் அடிப்படையில் பட்டியலிட்டு செய்யும் போது, மற்ற வளர்ச்சிகளும் ஏற்படும். ஒவ்வொரு வட்டாரத்திலும் இருக்கக்கூடிய திட்டமிடலை வைத்து புதிதாக ஒரு திட்ட வடிவமைப்பை உருவாக்குகின்ற போது, இந்த திட்ட அடிப்படையில் 2026 மற்றும் 2027 ஆண்டு எப்படி இருக்க வேண்டும் என்ற வகையில் உருவாக்குகிறார்கள். எந்த சின்ன செயல்களை செய்வதன் மூலமாக அதிகபட்சமான நன்மைகள் ஏற்படும், ஆனால் மறைமுகத் தாக்கம் என்பது விரிவாக இருக்கும் என்பதை எல்லாம் புரிந்து கொண்டு, நீங்களும், அந்தந்த வட்டாரத்தில் உள்ள கீழ்நிலை அலுவலர்களும் புரிந்து கொள்வது மிக அவசியம் என்பதை பற்றி புரிதல் உருவாக்க வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News