25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில்ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு >> இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >>


முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் முன்னிலையில்  (06.03.2024) நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், 2552 பயனாளிகளுக்கு ரூ.12.63 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளையும், பல்வேறு கலை மற்றும் விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும்  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பன்முக ஆற்றலையும், அவர் படைத்தளித்த மக்கள் நலத்திட்டங்களையும், சமுதாயத்தில் அதன் தாக்கத்தையும் வருங்காலங்களில் தமிழ்நாட்டு மக்கள் என்றென்றும் நினைவில் கொள்ளும் வகையிலும், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக அறிவித்து நிறைவேற்றிய திட்டங்களை இளைய சமுதாயத்தினர் அறிந்து கொள்ளும் வகையிலும், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் நமது விருதுநகர் மாவட்டத்தில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு,  நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை  மூலம்  சிவகாசி வட்டாரத்தில் 259 பயனாளிகளுக்கு ரூ.1.85 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனைப்பட்டாக்கள், இராஜபாளையம் வட்டாரத்தில் 275 பயனாளிகளுக்கு ரூ.2.02 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனைப்பட்டாக்கள், திருவில்லிபுத்தூர் வட்டாரத்தில் 189 பயனாளிகளுக்கு ரூ.77.76 இலட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப்பட்டாக்கள், வத்திராயிருப்பு வட்டாரத்தில் 200 பயனாளிகளுக்கு ரூ.1.37 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனைப்பட்டாக்கள், அருப்புக்கோட்டை வட்டாரத்தில் 200 பயனாளிகளுக்கு ரூ.70 இலட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப்பட்டாக்கள், காரியாபட்டி வட்டாரத்தில் 200 பயனாளிகளுக்கு ரூ.1.10 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனைப்பட்டாக்கள், திருச்சுழி வட்டாரத்தில் 200 பயனாளிகளுக்கு ரூ.1.06 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனைப்பட்டாக்கள், சாத்தூர் வட்டாரத்தில் 202 பயனாளிகளுக்கு ரூ.61.14 இலட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப்பட்டாக்கள், விருதுநகர் வட்டாரத்தில் 202 பயனாளிகளுக்கு ரூ.26.67 இலட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப்பட்டாக்கள், வெம்பக்கோட்டை வட்டாரத்தில் 175 பயனாளிகளுக்கு ரூ.62.13 இலட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப்பட்டாக்கள், கூட்டுறவுத்துறை மூலம் 183 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1.04 கோடி மதிப்பிலான கடனுதவிகள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 98 பயனாளிகளுக்கு ரூ.5.45 இலட்சம் மதிப்பிலான இலவச தையல் இயந்திங்கள் மற்றும் இலவச தேய்ப்பு பெட்டிகள், வேளாண்மைத்துறை மூலம் 50 பயனாளிகளுக்கு ரூ.58,215- மதிப்பிலான இடுபொருட்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகம் மூலம் 119 பயனாளிகளுக்கு ரூ.1.14 கோடி மதிப்பிலான பெட்ரோல் இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 2552 பயனாளிகளுக்கு ரூ.12.63 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.விருதுநகர் மாவட்டத்தில் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சமீபத்தில் சுமார் 200 பயனாளிகளுக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்பட்டன. அடுத்த கட்டமாக இன்று பல்வேறு துறைகளின் சார்பாக 2500 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ரூ.12.70 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும்,  பல்வேறு  போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ செல்வங்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. இந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு முதற்கட்டமாக இன்று மட்டும் 119 நபர்களுக்கு மற்ற மாவட்டங்களை விட அதிகமாக கூடுதலான வாகனங்களை பெற்று இரு சக்கர வாகனங்களை வழங்கி இருக்கிறோம். அதுமட்டுமில்லாமல் மாற்றுத்திறனாளிகளுக்கு 1000-க்கும் மேற்பட்ட பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு உறுதுணையாக இருக்கும் அமைச்சர் பெருமக்கள் அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் மாவட்டத்தில் குறைதீர்க்கும் நாள், முதலமைச்சரின் தனிப்பிரிவு உள்ளிட்டவைகளில் பெறப்படும் பல்வேறு மனுக்களுக்கு அனைத்து துறை ஒத்துழைப்புடன் விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News