25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில்ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு >> இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >>


News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

"மக்களுடன் முதல்வர்" திட்டம் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில், தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் (16.02.2024) சென்னை கலைவாணர் அரங்கில் "மக்களுடன் முதல்வர்" திட்டம் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில், தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியினை பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கி துவக்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து, விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் (16.02.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,  I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும்  நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு அவர்கள் ஆகியோர் 5596 பயனாளிகளுக்கு ரூ.9.36 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் மக்களை சென்றடையும் வகையிலும், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திடவும், “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தினை கோயம்புத்தூரில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 18.12.2023 அன்று தொடங்கி வைத்தார்.
இந்த "மக்களுடன் முதல்வர்" என்ற இப்புதிய திட்டத்தின் கீழ், பொதுமக்கள் அதிகமாக அணுகும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் மேம்பாட்டுக் கழகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, எரிசக்தி துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை ஆகிய 13 அரசுத் துறைகள் சார்ந்த கோரிக்கைகளைப் பெற்று தீர்வு காண்பதற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில், அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மற்றும் கிராம ஊராட்சி அளவில், அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பல்வேறு  மனுக்கள் பெறப்பட்டன.

விருதுநகர் மாவட்டத்தில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் நகர்புறத்தை ஒட்டியுள்ள ஊராட்சிகள் ஆகியவற்றில் “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்கள் 20.12.2023  முதல் 30.12.2023 வரை நடைபெற்றது.
இம்முகாம்களின் மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்து, தகுதியான பயனாளிகளுக்கு நடைபெற்ற விழாவின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் ரூ.6.67 இலட்சம் மதிப்பில் வீட்டு மனை பட்டா, தையல் இயந்திரம், உதவித்தொகை, மானியத்துடன் கூடிய தாட்கோ கடன் உதவிகளையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் ரூ.4.28 இலட்சம் மதிப்பில் இலவச வீட்டு மனை பட்டா, வாழ்வாதார கடனுதவிகளையும், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மூலம் ரூ.8.08 இலட்சம் மதிப்பில் அந்நியோதயா அன்ன யோஜனா அட்டைகளையும்,எரிசக்தி துறையின் மூலம் ரூ.2.90 இலட்சம் மதிப்பில் மின் இணைப்பு பெயர் மாற்றம், புதிய இணைப்பு, கட்டண மாற்றங்கள் உள்ளிட்ட சேவைகளையும், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் மூலம் ரூ.21 இலட்சம் மதிப்பில் குடியிருப்புகள் ஒதுக்கீடு, நகர் ஊரமைப்பு இயக்கம், கட்டிட ஒப்புதல்களையும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் சார்பில் ரூ.19,600 மதிப்பிலான உதவித்தொகை, நல வாரிய அட்டைகளையும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை மூலம் ரூ.4.33 கோடி மதிப்பில் மானியத்துடன் கூடிய கடன் உதவிகளையும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலம் ரூ.4.47 கோடி மதிப்பில் உதவித்தொகைகள், பட்டா தொடர்பான சேவைகள், முதியோர் ஓய்வூதியங்களையும், சமூக நலன் மற்றும் மகளிர் துறை மூலம் ரூ.3.92 இலட்சம் மதிப்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட உதவிகள், தையல் இயந்திரங்களையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் ரூ.10 இலட்சம் மதிப்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடுத் திட்ட உதவிகள், இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 5596 பயனாளிகளுக்கு ரூ.9.36 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை  அமைச்சர் பெருமக்கள் அவர்கள் வழங்கினார்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News