25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >> விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு >>


சாஸ்தா கோவில் தலைமை நீரேற்றும் நிலையத்திற்கு 24 மணி நேரம் மும்முனை இணைப்பு வழங்கும் திட்டம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சாஸ்தா கோவில் தலைமை நீரேற்றும் நிலையத்திற்கு 24 மணி நேரம் மும்முனை இணைப்பு வழங்கும் திட்டம்

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டம் செட்டியார்பட்டி நாயுடு தெற்கு தெருவில், செட்டியார்பட்டி பேரூராட்சிக்கு மூலதன மானிய நிதித்திட்டம் 2023-24 கீழ் ரூ.8.77 கோடி மதிப்பில் கூடுதல் குடிநீர் திட்டம் மற்றும் இயக்கம் மற்றும் பராமரிப்பு நிதி திட்டம் 2023-24 கீழ் ரூ.1.42 கோடி மதிப்பில் சாஸ்தா கோவில் தலைமை நீரேற்றும் நிலையத்திற்கு 24 மணி நேரம் மும்முனை இணைப்பு வழங்கும் திட்டம் என மொத்தம் ரூ.10.19 கோடி மதிப்பிலான திட்ட பணிகளுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் திரு.தனுஷ் எம்.குமார் அவர்கள் மற்றும் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.தங்கப்பாண்டியன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் (06.03.2024) அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி எண்110-ன் கீழ் "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள். இத்திட்டம் மூலம்  அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும்  அவர்களது தொகுதிகளில் நீண்டகாலமாகநிறைவேற்றப்படாத10முக்கியகோரிக்கைகளைசம்பந்தப்பட்டஅனுப்பிவைக்குமாறுகேட்டுக்கொள்ளப்பட்டது.அதனடிப்படையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செட்டியார்பட்டி பேரூராட்சிக்கு கூடுதல் குடிநீர் திட்டம் மற்றும் சாஸ்தா கோவில் தலைமை நீரேற்று நிலையத்திற்கு 24 மணி நேரமும் மும்முனை மின் இணைப்பு  ஆகியவை முன்மொழியப்பட்டது.

அதன்படி, இராஜபாளையம் வட்டம் செட்டியார்பட்டி பேரூராட்சிக்கு ரூ.8.77 கோடி மதிப்பில் கூடுதல் குடிநீர் திட்டம் மற்றும் 1.42 கோடி மதிப்பீட்டில் "சாஸ்தா கோவில்” தலைமை நீரேற்றும் நிலையத்திற்கு 24 மணி நேர மும்முணை மின் இணைப்பு வழங்கும் திட்டம் என மொத்தம் 10.19 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டப்படுள்ளது என தெரிவித்தார்
செட்டியார்பட்டி பேரூராட்சிக்கு உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் மூலம் மூலதன மானிய நிதித்திட்டம் 2023-24 கீழ் சாஸ்தா கோவில் தலைமை நீரேற்று நிலையத்தில் இரண்டு புதிய திறந்த வெளிக்கிணறு அமைத்து 11.92 கிலோமீட்டர் தொலைவு குழாய் பதித்து  5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி அமைக்கும் பணிகள் ரூ.8.70 கோடி மதிப்பிலும்,
இயக்கம் மற்றும் பராமரிப்பு நிதி 2023-24 திட்டத்தின் கீழ் சாஸ்தாகோயில் தலைமை நீரேற்று நிலையத்திற்கு 24 மணி நேர மும்முனை மின் இணைப்பிற்கு தனியாக வழித்தடம் அமைத்தல் பணிகள் ரூ.1.42 கோடி மதிப்பிலும் என மொத்தம் ரூ.10.19 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் இப்பகுதி மக்களுக்கு சீரான தண்ணீர் வழங்கப்படும். இத்திட்டம் மிக விரைவில் செயல்படுத்தப்படும்.  முதலமைச்சர் அவர்கள் ஏழை எளிய பொதுமக்களுக்காக ஆட்சி செய்து வருகிறார். நீண்ட நாள் நிலுவையில் உள்ள மக்களுக்கான திட்டங்கள் அனைத்தையும் இந்த அரசு உறுதியாக செயல்படுத்தும் என தெரிவித்தார்.மேலும், இப்பணிகளை குறித்த காலத்திற்குள் தரமானதாக முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களைஅமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News