25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில்ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு >> இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >>


பள்ளிகளில் இடைநின்ற மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில் இரண்டாம் கட்டமாக சிறப்பு களச் செயல்பாடு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பள்ளிகளில் இடைநின்ற மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில் இரண்டாம் கட்டமாக சிறப்பு களச் செயல்பாடு

விருதுநகர் மாவட்டத்தில், பள்ளிகளில் இடைநின்ற மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில் இரண்டாம் கட்டமாக சிறப்பு களச் செயல்பாடு 05.03.2024 அன்று அனைத்து வட்டாரங்களிலும் நடைபெற உள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 வட்டாரங்களில் 10-ஆம் வகுப்பில் 388 மாணவர்களும், 11-ஆம் வகுப்பில் 135 மாணவர்களும், 12-ஆம் வகுப்பில் 233 மாணவர்களும், என மொத்தம் 756 இடைநிற்றல் மாணவர்கள் கண்டறிப்பட்டு,  முதற்கட்டமாக 24.02.2024 அன்று மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை), துணை ஆட்சியர்கள், துணைக்காவல் கண்காணிப்பாளர் மற்றும் வட்டாட்சியர்கள் உட்பட 80 அலுவலர்கள் தனித்தனியாக கள ஆய்வு செய்து, விவரங்கள் கேட்டறிந்து, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, அவர்களை மீண்டும் பள்ளியில் சேர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, இரண்டாம் கட்டமாக மாவட்டத்தில் உள்ள 11 வட்டாரங்களில் 6-ஆம் வகுப்பில் 110 மாணவர்கள், 7-ஆம் வகுப்பில் 150 மாணவர்கள், 8-ஆம் வகுப்பில் 223 மாணவர்கள், 9-ஆம் வகுப்பில் 565 மாணவர்கள் என மொத்தம் 1049 இடைநிற்றல் மாணவர்கள் உள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை), துணை ஆட்சியர்கள், துணைக்காவல் கண்காணிப்பாளர் மற்றும் வட்டாட்சியர்கள் உட்பட 175 அலுவலர்களுக்கு ஒவ்வொரு அலுவலர்களுக்கும் தனித்தனியாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடைநின்ற மாணவர்களின் விபரங்கள் கொடுக்கப்பட்டு, ஒவ்வொரு அலுவலர்களும் நேரில் சந்தித்து, இடைநிற்றலுக்கான காரணம் அறிந்து, குறைகளை நீக்கி, மீண்டும் பள்ளியில் சேர நடவடிக்கை எடுக்க உள்ளனர்.பள்ளி கல்வியில் சிறப்பான தேர்ச்சி சதவீதமுடைய நமது விருதுநகர் மாவட்டத்தில், இடையிற்றல் இல்லா மாவட்டமாக மாற்ற அலுவலர்களின் இந்த கள செயல்பாட்டிற்கு, பெற்றோர்கள்கள், முழு ஒத்துழைப்பு தருமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News