25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >> விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு >>


இராஜபாளையத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இராஜபாளையத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ந.அ. அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் (17.03.2024) மக்களவைத் தேர்தல்- 2024 யை முன்னிட்டு வாக்காளர் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி முதல் தலைமுறை வாக்காளர்களான கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற  வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தொடங்கி  வைத்து, பேரணியில் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மக்களவைத் தேர்தல்- 2024 நடைபெறயுள்ளதையொட்டி வாக்காளர்களிடையே 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துக் கூறும் வகையில் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி  இராஜபாளையம் ந.அ. அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில்  வாக்காளர் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி  வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி  வைத்து, பேரணியில் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்த பேரணியில் சுமார் 500க்கும் மேற்பட்ட முதல் தலைமுறை வாக்களர்களான கல்லூரி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து,  வாக்களிப்பது நமது உரிமை, கையூட்டு பெறாமல் வாக்களிக்க வேண்டும். நம்மை ஆள்பவரை நாமே தீர்மானிக்க வேண்டும்.  ஜனநாயக கடமையை நாம் ஆற்ற வேண்டும் என்ற வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய  பதாதைகளை ஏந்தி சென்று, விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பி, அன்னப்ப ராஜா பள்ளியில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக  ஜவஹர் மைதானம் வரை  சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வாக்காளர்கள் அனைவரும் 100 சதவிகிதம் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்றும், நேர்மையான, ஞாயமான, வெளிப்படைதன்மையுடன் தேர்தல் நடைபெறுவதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்  என மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் கேட்டுக்கொண்டார்.இந்நிகழ்ச்சியில், தனித்துணை ஆட்சியர் (முத்திரை) திரு.பிரேம்குமார்,  உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட வழங்கல் அலுவலர்  திருமதி அனிதா, வட்டாட்சியர் உட்பட   அரசு அலுவலர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News