ஆயுளை அதிகரிக்கும் நடை
அமெரிக்காவில்1.10 லட்சம் பேரிடம் நடத்திய ஆய்வில் தினமும்9 ஆயிரம் ஸ்டெப்(அடி) நடப்பது, உயிரிழப்பு வாய்ப்பை தள்ளி வைத்து ஆயுட்காலத்தை அதிகரிக்க உதவும் என அமெரிக்க கார்டியாலஜி கல்லுாரி தெரிவித்துள்ளது. தினமும்2500 ஸ்டெப் நடப்பது உயிரிழப்பை8 சதவீதம் குறைக்கிறது. அதேபோல2700 ஸ்டெப் எனில்11%,7000 ஸ்டெப் எனில்51%,9000 ஸ்டெப் எனில்60% குறைக்கிறது. இதனுடன் படிப்படியாக தினமும் கூடுதலாக1000 ஸ்டெப் நடப்பது(சராசரியாக10 நிமிடம் நடப்பதற்கு சமம்) கூடுதல் பலனை தருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0
Leave a Reply