25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில்ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு >> இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >>


இரவு நேரங்களில் ஒலிபெருக்கியை பயன்படுத்துவோர் மீதும் மற்றும் தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கியினை உபயோகிப் போர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இரவு நேரங்களில் ஒலிபெருக்கியை பயன்படுத்துவோர் மீதும் மற்றும் தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கியினை உபயோகிப் போர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்

அளவுக்கு அதிகமான மற்றும் விரும்பத்தகாத அதிகசத்தம், மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. விதிகளை மீறி செயல்படும் தொழிற்சாலைகள், அதிக ஒலி எழுப்பும் வாகனபோக்கு வரத்து மற்றும் ஒலிபெருக்கிகள் ஒலிமாசு ஏற்பட முக்கிய காரணிகளாக விளங்குகின்றன. இதனால் பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படுவதாக பத்திரிக்கை செய்திகள், புகார்கள் வந்துள்ளன.

பொதுவாக, தொழிற்சாலைகள் ஒலி மாசினைக்குறைக்க ஒலி மாசுதடுப்பு சாதனங்களை நிறுவி ஒலி மாசினைக்குறைக்கின்றன. இது போன்று, வாகனப்போக்குவரத்தை நெறிப்படுத்துவதன் மூலமும் ஒலிமாசினைக் குறைக்க இயலும். ஆனால், பொதுசுகாதாரச் சட்டத்தில் உள்ள வழிமுறைகளை மீறி அரசியல் கட்சி நிகழ்வுகள், திருவிழாக்கள் மற்றும் தனிநபரால் நடத்தப்படும் விழா மற்றும் கொண்டாட்டங்களில் முறையற்ற வகையில் ஒலி பெருக்கிகளை உபயோகிப்பதனால் வெளி வரும் அதிகசத்தமான ஒலி மாசினால், பொதுமக்களுக்கும், முதியோர்களுக்கும் மற்றும் நோயாளிகளுக்கும் எண்ணற்ற இன்னல்கள் ஏற்படுகின்றன. மேலும், தேர்விற்குத்தயார் செய்யும் மாணவர்களுக்கும் இன்னல்கள் ஏற்படுகின்றன.

எனவே, மேற்கூறிய நிகழ்வுகளுக்கு ஒலி பெருக்கியை நிறுவி பயன்படுத்தும் முன் காவல் துறையிடம் முறையாக முன் அனுமதிபெற்று, அனுமதிக்கப்பட்ட பகுதி மற்றும் நேரங்களில் மட்டுமே குறைந்த ஒலியுடன், ஒலி பெருக்கியினை உபயோகித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கஅறிவுறுத்தப்படுகிறது. மேலும், இரவு நேரங்களில் (இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை) ஒலிபெருக்கியினை உபயோகிக்கக் கூடாது என்றும் மற்றும் கூம்பு வடிவ ஒலி பெருக்கியினைக் கண்டிப்பாக பயன்படுத்தக கூடாது எனவும் அறிவுறுத்தப்படுகிறது.காவல்துறை அனுமதியின்றி ஒலிபெருக்கியை நிறுவி உபயோகிப்பவர்கள் மீதும், இரவு நேரங்களில் ஒலிபெருக்கியை பயன்படுத்துவோர் மீதும் மற்றும் தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கியினை உபயோகிப்போர் மீதும் கடுமையான குற்றவியல் நடவடிக்கைகளும் மற்றும் ஒலி பெருக்கி சாதனங்களைப்பறி முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News